“உன்னுடன் இது போல பல பிறந்த நாட்களை கொண்டாட விரும்புகிறேன்..!” மனைவியின் Birthday வாழ்த்துக்கள்

வெளியிட்டது

சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்த ரெடின் கிங்க்ஸ்லிக்கு இன்று 47வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதற்காக அவரது மனைவி சமூக வலைத்தளங்களில் ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். நடன கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி. இவர் முதல் முறையாக நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் எல்கேஜி, கூர்க்கா, டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, டிடி ரிட்டன்ஸ், ஜெயிலர், மார்க் ஆண்டனி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘கங்குவா’, ‘வாஸ்கோடகாமா’ என்கிற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

"உன்னுடன் இது போல பல பிறந்த நாட்களை கொண்டாட விரும்புகிறேன்..!" மனைவியின் Birthday வாழ்த்துக்கள் 1
46 வயதான ரெடின் கிங்க்ஸ்லி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’, ‘அரண்மனைக்கிளி’ போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டிருந்தார். மைசூரில் ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டிருந்த ரெடினை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து எளிமையான முறையில் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டிருந்தார். நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற சங்கீதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க, அங்கேயே வைத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில் இன்று ரெடினுக்கு இன்று 47வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.


அப்போது திருமணத்தன்று எடுத்துக்கொண்ட ரொமான்டிக் படங்களை பதிவிட்டு இருக்கும் சங்கீதா, “என்னுடைய இன்னொரு பாதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு கணவராக நீங்கள் என் மீது பொழியும் அன்பையும் அக்கறையும் காதலையும் நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். உங்களுடன் இதுபோல பல பிறந்த நாட்களை கொண்டாட விரும்புகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே” என பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு கீழே பலரும் ரெடின் கிங்க்ஸ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்