“இனிமே ஜனனிக்கு நான் தான் எதிரி” ஜனனிக்கு எதிராக புதிதாக களம் இறங்கிய வில்லன்..!

சன் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தாரா அவரது வாயை அடைக்கிறார். தாராவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குணசேகரனும், விசாலாட்சியும் வாயடைத்துப் போகின்றனர். அதே சமயம் “ஜனனிக்கு நான் தான் எதிரி” என்று சொல்லி புதிதாக ஒரு நபர் வந்து வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கிறார். அவர் யார்? கிருஷ்ணசாமி ஐயப்பன் கதாபாத்திரத்தை மாற்றி விட்டார்களா? என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இனிமே ஜனனிக்கு நான் தான் எதிரி" ஜனனிக்கு எதிராக புதிதாக களம் இறங்கிய வில்லன்..! 1

விளம்பரம்

‘எதிர்நீச்சல்’ சீரியலில் குணசேகரனின் தம்பியாக இருக்கும் கதிரை ரவுடிகள் சிலர் அடித்து துவைக்கின்றனர். எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் கதிர் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாராவும் நந்தினியும் மாறி மாறி கவனித்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கதிரின் அறைக்கு வரும் குணசேகரன், விசாலாட்சி ஆகியோர் வருகின்றனர். அப்போது தாராவிடம் குணசேகரன், “அப்பா ஒன்றும் அவ்வளவு முக்கியம் கிடையாது” என்று கூறுகிறார். அதற்கு பதிலுக்கு தாரா, “அப்பா முக்கியமில்லை என்று சொல்கிறீர்களே? அன்றைக்கு தர்ஷினி அக்கா, வேறு ஒருவரை அப்பா என்று சொன்னபோது எதற்காக கோபப்பட்டீர்கள்?” என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் குணசேகரன், விசாலாட்சி வாய் அடைத்துப் போகின்றனர்.

தொடர்புடையவை  மகனை பார்த்ததும் ஓடி சென்று கட்டி பிடித்து அழுத மணி.! அப்பாவின் பாசம் விலைமதிப்பில்லாத ஒன்று.!

"இனிமே ஜனனிக்கு நான் தான் எதிரி" ஜனனிக்கு எதிராக புதிதாக களம் இறங்கிய வில்லன்..! 3
அப்போது ஞானம் தாராவிடம் என்ன ஓவராக பேசுகிறாய்? என்று கேட்க, ஜனனி அவள் சரியாகத்தான் கேள்வி கேட்கிறார் என்று கூறுகிறார். நிலைமை ஒரு புறம் இப்படி இருக்க ஒருவர் புதிதாக வந்து குணசேகரன் வீட்டில் அமர்ந்து கொண்டு “நான் ஜனனியின் எதிரி” என்று கூறிக் கொண்டிருக்கிறார். இவர் யார்? இது என்ன புது கதாபாத்திரம்? இல்லை கிருஷ்ணசாமி மெய்யப்பன் கதாபாத்திரத்தை மாற்றிவிட்டார்களா? என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..,,! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment