Categories: சினிமா

ரீமா சென்னின் மகனை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக மகனின் புகைப்படங்களை பகிர்ந்த ரீமா சென்

வெளியிட்டது

நடிகை ரீமா சென் தற்போது தனது மகனின் 10 வயது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் முறையாக பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரீமா சென். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் பின்னாளில் மும்பைக்கு குடி பெயர்ந்தார். மும்பையில், அவர் தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார்.

ரீமா சென்னின் மகனை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக மகனின் புகைப்படங்களை பகிர்ந்த ரீமா சென் 1

பல விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினர். பின்னர் அவர் படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக திரைத்துறையில் நடிக்கத் தொடங்கினர். முதல் முறையாக தெலுங்கு திரைப்படமான சித்ரம் என்னும் படம் மூலம் அறிமுகமானார், அதில் அவர் உதய் கிரணுடன் நடித்தார், பின்னர் அவர் மனசந்த நுவ்வேயில் ஜோடியாக நடித்தார்.

2002ம் ஆண்டு மாதவனுடன் மின்னலே என்ற தமிழ்த் திரைப்படத்திலும் நடித்தார், அது மிகவும் வெற்றியடைந்தது. அவரது முதல் ஹிந்தி படமான ஹம் ஹோ கயே ஆப்கே தோல்வியடைந்ததால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்தார். தமிழ் படமான ரெண்டு படத்தில் மாதவனுடன் மீண்டும் அவர் நடித்தது வெற்றி பெற்றது.

திமிரு படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் வல்லவன் ஆகிய படங்களில் அவரது எதிர்மறை பாத்திரம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

அவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் செல்லமே தான். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மைதிலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். பின்னர் ரீமா சென் தொழிலதிபர் ஷிவ் கரண் சிங்கை 2012 இல் மணந்தார். அவர்களுக்கு 22 பிப்ரவரி 2013 அன்று மகன் ருத்ரவீர் பிறந்தார்.அதன் பின்னர் அவர் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார்.

தமிழில் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் மட்டும் நடித்தார். அதன் பின்னர் முற்றிலும் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார். இந்த நிலையில் ரீமா சென் மகனுக்கு இன்று 10வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. மகனின் புகைப்படங்களை பகிர்ந்த அவர், என் காதல் இனி எனக்குள் இல்லை. நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் அந்த காதலை எடுத்துச் செல்லுங்கள். ஹாப்பி 10வது பிறந்தநாள் மை குட்டி ராக்ஸ்டார் என்று பகிர்ந்து இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரீமா சென்னின் ரசிகர்கள் நம்ம ரீமா சென் பையனா இது இவளோ பெரிய பையன் இருக்கிறாரா என்று அதிர்ச்சியாக பார்த்து வருகின்றனர். மேலும் அந்த குட்டி பையனுக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்