சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டதால் கடலூரில் தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது.
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 20,570 பேர் மனுதாக்கல் செய்தனர். இவற்றுள் 20 ,370 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் கடலூர் கோண்டூர் மற்றும் திருமாணிக்குழி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியினர் குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்களுக்கு உதயசூரியன் இன்னமும் ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுள்ளனர் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை முடிவு செய்து அதற்கான சான்றிதழை வழங்கி உள்ளார்.
இதுபற்றி அறிந்த அதிமுக உறுப்பினர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் 172 சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்து கொடுத்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாகவே தேர்தல் அதிகாரியான அருள் அரசனை அதிமுகவினர் தள்ளிவிட்டு தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதைதொடர்ந்து வி.சி.கவினருக்கு அளிக்கப்பட்ட திமுக சின்னத்தை திரும்பப் பெற வேண்டும் என அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மேல் அதிகாரிக்கு விளக்கம் கடிதம் அனுப்புவதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்டதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.