பேரணியில் கலந்து கொள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு அழைப்பு

திமுக தலைமையில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கு பெறுமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டத்தை தவறாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மாவட்ட முழுவதும் எடுத்துச் சென்று உள்ள திமுக வரும் 23 ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அளித்துள்ளது இரு தினங்களுக்கு முன்பு கமலஹாசனை சந்தித்து அழைப்பிதழை கொடுத்தனர்.

விளம்பரம்
பேரணியில் கலந்து கொள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு அழைப்பு 1
திமுக தலைவர் மு க ஸ்டாலின்

இந்நிலையில் நடிகர் ரஜினி அஜித் விஜய் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு திமுக தலைமை நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அதன் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி எல்லைகளைக் கடந்து, மதம், சாதி, மாநிலப் பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தைத் திரும்பப் பெற வைக்க முடியும். எனவே, தாங்கள்,
தங்கள் அமைப்பும் இப்பேரணியிலும் அதைத் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டங்களிலும் பங்கெடுத்து தங்களது ஜனநாயகக் குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன்” என கூறியுள்ளார்

விளம்பரம்

Leave a Comment