நான் Biggboss பாக்கல ஆனா அசீம் நல்லவன்.! திரை விமர்சகர் பிரசாந்த் போட்ட ட்வீட்டால் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

அசீமுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார் பிரபல திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி. தான் பிக்பாஸை பார்ப்பதில்லை, ஆனால் அசீம் நன்றாக விளையாடுகிறார் என்று மக்கள், சொல்ல கேட்டிருக்கிறேன், அதனால் “மக்கள் செல்வன்” அசீம் தான் என்கிற ஒரு பதிவை ட்விட்டரில் போட்டிருந்தார். இது இணையத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. பிரசாந்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். சினிமாவை திரைவிமர்சனம் என்ற பெயரில் விமர்சித்து அதன் மூலம் பிரபலமானவர்கள் தமிழகத்தில் பல பேர் இருக்கிறார்கள். தற்போது ப்ளூ சட்டை மாறனுக்கு பிறகு பலராலும் அதிகம் விரும்பி பார்க்கப்படுபவர் தான் பிரசாந்த் ரங்கசாமி. இவர் படம் வெளியான உடனேயே அதை பார்த்துவிட்டு நேர்மறையான பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால், இவரை பின் தொடர்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இவரது யூடியூப் சேனலை சுமார் 8 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

நான் Biggboss பாக்கல ஆனா அசீம் நல்லவன்.! திரை விமர்சகர் பிரசாந்த் போட்ட ட்வீட்டால் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1
அசீம் தான் டைட்டிலை ஜெயிக்கப் போகிறார் என்று பிரசாந்த் தொடர்ந்து பதிவுகளை போட்டு வரும் நிலையில் அப்யூசர் அசீம் (#AbuserAzeem) என்ற ஹேஷ்டாக்கை பிக்பாஸ் ரசிகர்கள் காலை முதலே ட்ரெண்டாகி வந்திருக்கின்றனர். அசீமுக்கு வெளியில் ஒரு ஸ்ட்ராங்கான PR டீம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.்ய அரசியல் கட்சிகள் தற்போது தங்கள் வெற்றி பெறுவதற்காக இது போன்ற நிறுவனங்களை அணுகி தங்களையும், கட்சியையும் பிரபலப்படுத்திக் கொள்கின்றனர். அதுபோல தான் எது செய்தாலும் அது பாசிட்டிவாக பிரபலமாக வேண்டும் என்று ஒரு அணியை வைத்து அசீம் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது எழுந்து கொண்டே தான் இருந்தது. இந்த நிலையில் பிரசாந்த் தற்போது நான் பிக்பாஸ் பார்ப்பதில்லை ஆனால் மக்கள் அசீம் நன்றாக விளையாடுகிறார்கள் என்று “மக்களின் செல்வன் அசீம்” என்கிற ஒரு பதிவையும் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது பிரசாந்தை வச்சி செய்து வருகின்றனர்.


மேலும் அறம் வெல்லும் என்று விக்ரமன் கூறி வருவதை கோலமாக சிலர் போட்டிருப்பதை பகிர்ந்த அவர், அதற்கு ஏன் என் முகத்தை வரைந்து வைத்திருக்கிறீர்கள் என்று கலாய்த்து பதிவிட்டு இருந்தார். மேலும் அசீன் வின் பண்ணா இந்த சமூகம் கெட்டதாகிவிடுமா? அப்போ விக்ரமன் வின் பண்ணா தமிழ்நாடு சுவிட்சர்லாந்து ஆயிடுமா? என்றும் பதிவிட்டு இருந்தார். மேலும் விக்ரமன் நல்லவன் என்றால் அசீம் மகாத்மா என்கிற ரீதியிலும் கருத்து தெரிவித்து இருந்தார். இதை கவனித்த நெட்டிசன்கள் தற்போது பிரசாந்தை மரணமாக வைத்து கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் பார்க்காமலேயே ஒரு போட்டியாளர் நல்லவர் என்று கூறும் நீ இப்படித்தான் படங்களை பார்க்காமலும் இத்தனை நாள் விமர்சனம் செய்து வருகிறாயா?என்றும், அசீம் பி.ஆர்.டீமிடம் எவ்வளவு பணம் வாங்கினாய் என்றும் பிரசாந்தை கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர். இதனால் அசீமுக்கு எதிரானவர்களுக்கும் பிரசாந்திற்கும் ட்விட்டரில் ஒரு வார்த்தை போர் நீடித்து வருகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்