ஷூட்டிங் வீட்டு வாசலில் கலர் கோலம் போட்ட சைத்ரா.! கோலம் ரொம்ப அழகா இருக்கு கயல்.!

சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியல் ஷூட்டிங் நடக்கும் வீட்டின் வாசலில் கலர் கோலம் போடும் வீடியோவை தற்போது பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் தான் நடித்து வந்தார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் சைத்ரா. இதில் வில்லியாக நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். ஹீரோயினுக்கு பிறகு வில்லிக்கு அதிக வரவேற்பு கிடைத்த ஒருவர் என்றால் அது சைத்ராவாக தான் இருக்க முடியும். அந்த நாடகத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு அடுத்த நாடகமே மிகப்பெரிய தொலைக்காட்சியான சன் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கயல் என்கிற நாடகத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சைத்ரா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் வீட்டு வாசலில் கலர் கோலம் போட்ட சைத்ரா.! கோலம் ரொம்ப அழகா இருக்கு கயல்.! 1
இந்த சீரியலில் சைத்ராவுக்கு ஒரு எளிய குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் கதாபாத்திரமாக இருக்கிறார். தான் மட்டுமே வேலைக்கு சென்று தனது குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு தம்பி தங்கைகளையும் படிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சைத்ராவின் நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் பல இல்லத்தரசிகளுக்கும் சைத்ராவை மிகவும் பிடித்து விட்டது. எனவே இவர் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட வைரலாகி வருகிறது. மேலும் சைத்ராவிற்கு வெள்ளித் திரையிலும் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அவர் சமீபத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கயல் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பார். குறிப்பாக அவருடன் பணிபுரிந்த அவினாஷ் என்ற நடிகருடன் அவர் ரீல்ஸ் செய்து அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பணக்கார பையனா பாத்து லவ் பண்ண சொன்ன தாய்.! கமெண்ட்டுகளில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

ஷூட்டிங் வீட்டு வாசலில் கலர் கோலம் போட்ட சைத்ரா.! கோலம் ரொம்ப அழகா இருக்கு கயல்.! 3
தற்போது பொங்கலை முன்னிட்டு கயல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கயல் ஷூட்டிங் நடக்கும் வீட்டு வாசலில் அமர்ந்து அவர் கலர் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் கரும்பு தின்னும் வீடியோவையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். மேலும் பொங்கல் திருநாள் அன்று தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களையும் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கயல் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment