பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது 3 லட்சம் பணத்துடன் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பணப்பெட்டி டாஸ்க் இன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்க்கில் யார் பணத்தை எடுப்பார்கள்? என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் 3 லட்சம் பணத்துடன் தற்போது ஒரு முக்கிய போட்டியாளர் வெளியேறியிருக்கிறார். அந்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த வாரம் ஆறு பேரும் நாமினேஷனில் இருக்கும் நிலையில், பெட்டி வைக்கப்படும் டாஸ்க் என்று நடக்கும் என்று போட்டியாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இன்றே பெட்டி டாஸ்க்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

காலை முதலே வெளியான ப்ரோமோக்களில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர். அதில் ஆயிஷா, ரட்சிதா ஆகியோர் இன்று வருகை தந்திருந்தனர். இலங்கையை சேர்ந்த ஜனனி மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வராமல் இருக்கிறார். அவர் மீண்டும் இலங்கைக்கே சென்று விட்டதாக தெரிகிறது.இந்த நிலையில் இது கடைசி வாரம் என்பதால் ஒருவர் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்றும் மீதி இருக்கும் ஐந்து நபர்களை பைனலுக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆரம்பம் முதலே பெட்டி டாஸ்க் எப்பொழுது வைக்கப்படும் என்று பேச்சு போட்டி எழந்து வந்தது. குறிப்பாக மணிகண்டன், கதிரவன் ஆகியோர் இது குறித்து தொடர்ந்து பேசி வந்தனர். இந்த நிலையில் கடைசி ஆறு பேராக கதிரவன், மைனா, ஷிவின், விக்ரமன், அசீம், அமுதவாணன் ஆகிய ஆறு பேர் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று பெட்டிக்கு பதிலாக பணம் மூட்டை டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தது. அதில் 3 லட்ச ரூபாயுடன் கதிரவன் தற்போது வெளியேறியிருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. அனைவரும் இன்னும் பணம் அதிகரிக்கும் என்று காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நான் பெட்டியை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் கதிரவன் பின்னர் இது குறித்து பிக்பாஸ் உறுதிப்படுத்த தான் எடுத்துக் கொள்வதாக கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்போது 3 லட்ச ரூபாயுடன் பணப்பெட்டியுடன் வெளியேறி இருக்கிறார் கதிரவன். இது கதிரவனுடைய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமுதவாணன் பணப்பெட்டியை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசி திருப்பமாக கதிரவன் 3 லட்சத்துடன் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.!

ஆரம்பம் முதலே எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடாமல், எந்த ஒரு சண்டைக்கும் குரல் கொடுக்காமல், அநீதிக்கும் குரல் கொடுக்காமல் அமைதியான போட்டியாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே வந்தார். வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தியது இல்லை. தனது கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக விளையாடி 100 நாட்களை கடந்தார் கதிரவன். இந்த நிலையில் தற்போது அவர் 3 லட்சத்துடன் வெளியேறி இருக்கிறார். இவரை பலரும் மிக்சர் கதிரவன் என்றும் வெளியில் விமர்சித்தும், ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தும் வந்தனர்.