“போதை பொருள் வழக்கில் சிக்கும் சுஷாந்தின் காதலி…NCB வழக்கு பதிவு”

வெளியிட்டது

தமிழ் திரையுலக ரசிகர் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாத ஒரு ஹிந்தி நாயகனாக இருப்பவர் நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட். பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங்க் தோனியின் பியோபிக் படத்தில் நடந்து தமிழகமெங்கும் நல்ல ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளார் இவர். தோனியாக மட்டுமே நமக்கு தெரிந்த இவர், பாலிவுட்டிலும் மிக பெரிய அழியாத வடுவை உருவாக்கி சென்றுள்ளார்.

"போதை பொருள் வழக்கில் சிக்கும் சுஷாந்தின் காதலி...NCB வழக்கு பதிவு" 1

அனைத்து திரையுலகிலும் வாரிசுகளின் கை கொஞ்சம் ஓங்கியே இருக்கும், அது சகஜமே. இன்று தமிழக மக்களின் மனங்களை மிகவும் கவர்ந்த நடிகர்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு போன்றோர் வாரிசு நடிகர்களே. ஆனால் இங்கு இருக்கும் ஒரு ஆரோக்கியமான விஷயம் ஹிந்தியில் இல்லாமல் போயுள்ளளதாக பாலிவுட் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஜய், சிம்பு, தனுஷ் போலவே தமிழகத்தில் அஜித், விஜய் சேதுபதி, சிவா கார்த்திகேயன் போன்றோர் மிக பெரிய நடிகர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் அது பாலிவுட்டில் கொஞ்சம் மாறுப்படுகிறது. அதாவது அங்கு குறிப்பிட்ட நபர்களின் உதவியுடன் படங்களில் நடிக்க முடியும் என்ற நிலைமை நீடிக்கிறது. தனியாக எந்த பின்புலமும் இல்லாமல் படம் நடித்தாலும், அந்த படங்களை பாலிவுட் மீடியாக்கள் முழுவதுமாக ஒதுக்கி விடுகிறார்கள். அதனை “Bollywood Mafia” எனவும் அதை குறித்து முக்கிய நடிகையான கங்கனா ரணாவத் கூட பொதுவெளியில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

அந்த பிரச்சனைகளை கடந்து சீரியலில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சுஷாந்த், 2013ஆம் ஆண்டு வெளியான “கை போ சே” படம் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து, “ஸுத் தேசி ரொமான்ஸ், எம்.எஸ். தோனி, கேதார்நாத், Detective Byomkesh Bakshy, சிசோரே” போன்ற வெற்றி படங்களில் நடித்துளளார். குறிகிய காலத்திலேயே இந்தியாவெங்கும் ரசிகர் கூட்டம் கொண்ட இவர், திடிரென 2020ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டாலும், மறைமுகமாக சில நேரங்களில் சுஷாந்த் தான் அனுபவித்து வரும் கஷ்டங்களை சில மேடைகளில் கூறியுள்ளார் என்பதை ரசிகர்கள் பின்னர் கண்டுபிடித்து தெரிவித்து உள்ளார்கள். பாலிவுட் மாபியா என அழைக்கப்படுவதில் முக்கிய நபராக கருதப்படும் இயக்குனர் கரண் ஜோகரின் நிகழ்ச்சி ஒன்றில் வாரிசு நடிகை அலியா பட் “யார் சுஷாந்த்” என கேட்டது, மற்றொரு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அதே நிகழ்ச்சியில் தன் வளர்ப்பு மகளுக்கு மறைமுகமாக “கேதார்நாத்” படத்தில் உடன் நடித்த சுஷாந்த்தை ஒதுக்க கூறியது என பல விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்தன.

சில காலங்களில் அந்த குற்றம்சாட்டுகள் அப்படியே குறைந்தது விட, இப்பொது அவரின் காதலியான நடிகை றிய சக்ரவர்த்தி மீது NCB போதை பொருள் ரகசியமாக வாங்கி விநியோகித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இப்பொது இந்த வழக்கு உறுதியாகும் எனில் அவருக்கு 10 ஆண்டுகள் முதல்  20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கினறன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்