தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலர் பின்னாளில் காணாமல் போவது உண்டு. பலர் திருமணமான பின்பு தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவது வழக்கமான ஒன்றுதான். அவர்களைப் பற்றி எந்த தகவலும் கூட வருவதில்லை. ஏன் புகைப்படங்கள் கூட வருவதில்லை. அப்படி மறந்து போன ஒரு நடிகையாக இருப்பவர்தான் சிந்துமேனன். இவர் முதன் முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் மலையாளத்தின் முன்னணி நடிகர்களாக இருந்த மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பலருடன் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் முதன் முதலில் சமுத்திரம் என்ற படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தில் சிறந்த வில்லத்தனத்தை அவர் காட்டி இருந்ததால் அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் நடித்தார். இந்த படத்திலும் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆதி நடிப்பில் வெளியான இந்த படம் திரில்லர் படமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் 2010ல் லண்டனைச் சேர்ந்த ஒரு மென்பொறியாளர் உடன் அவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பின்னர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார். அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

லண்டனில் செட்டில் ஆன அவருக்கு சமீபத்தில் தான், அவருடைய மூன்றாவது மகன் பிறந்திருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் எப்போதும் தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகளை வரிசையாக அமர வைத்து அதனை போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஈரம் படத்தில் நடித்த இவருக்கு மூன்று குழந்தைகளா என்று நெட்டிசன்கள் வாய் அடைத்து போய் உள்ளனர். அதிலும் மூத்த மகள் அப்படியே அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

