Categories: சினிமா

குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாடிய காந்தார நாயகன் ரிஷப் ஷெட்டி..!

வெளியிட்டது

காந்தார படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. இப்படத்தை இவரே இயக்கி நடித்து இருந்தார். கன்னட மொழியில் வெளியாகி ஹிட் அடித்த இப்படம் தமிழ் மற்றும் பிறமொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் அனைத்து மொழி சினிமாக்களிலும் ரசிகர்களை பெற்றார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.

குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாடிய காந்தார நாயகன் ரிஷப் ஷெட்டி..! 1

அண்மையில் இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரிஷப் ஷெட்டி இன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

பண்டிகை வந்துவிட்டால் போதும் ரிஷப் ஷெட்டி குடும்பத்துடன் கொண்டாடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை கூறி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்