திரைப் பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் என பலரும் கொண்டாடி வரும் பூஜையாக இருக்கிறது வரலட்சுமி பூஜை. இந்த பூஜையை தமிழ் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு மற்றும் ஹிந்தி பிரபலங்கள் கூட கொண்டாடி வருகின்றனர்.

ஆவணி மாதத்தில் வரும் ஒரு வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் பெண்கள் பலராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த நாளில் கலசத்தில் தேங்காய் வைத்து அதில் மஹாலெட்சுமி அம்மன் முகம் செய்து வைத்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வழங்குவது ஐதீகமாக இருந்து வருகிறது.
இந்த பூஜை செய்வதன் மூலம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகுவதுஎன்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தங்களின் கணவரின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் சுமங்கலி பூஜை செய்யப்படுகிறது.
சமீப காலமாக இந்த வழக்கம் தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் நடிகர்கள் பலரும் இந்த பூஜையை கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காந்தாரா படத்தின் மூலமாக பிரபலமான நடிகர் ரிஷப் செட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து இந்த பூஜையை கொண்டாடி இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பதிவிட்ட ரிஷப் செட்டியின் மனைவி பிரகதி “வர மகாலட்சுமி பூஜையை குடும்பத்துடன் நாங்கள் கொண்டாடினோம், மகாலட்சுமி தாயார் ஒவ்வொருவருக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் செல்வத்தையும் வழங்கட்டும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் முதல் முறையாக தனது குழந்தைகளை ரிஷப் ஷெட்டி காட்டி இருக்கிறார். பலரும் ரிஷப் ஷெட்டி பகிர்ந்துள்ள புகைப்படத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!