ஹனிமூனுக்கு போன இடத்தில் மரண குத்தாட்டம் போடும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.!

வெளியிட்டது

மாலத்தீவில் ஹனிமூனுக்கு சென்ற ரித்திகா அங்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் இதற்கு முன்பாக ராஜா ராணி சீசன் 1 இல் நடிகர் சஞ்சீவுக்கு தங்கையாக கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 2வில் ஒரு போட்டியாளராக பங்கு எடுத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ரித்திகாவுக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. இவர் சமீபத்தில் தன்னுடன் பணியாற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் வினு நாராயணன் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் எளிமையாக வைத்து திருமணம் நடைபெற்றது.

ஹனிமூனுக்கு போன இடத்தில் மரண குத்தாட்டம் போடும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.! 1

சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக வரவேற்பு நடைபெற்றது இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரித்திகா மாலத்தீவிற்கு ஹனிமூன்க்கு சென்று இருக்கிறார்.அங்கு பிறந்தநாள் கொண்டாடிய ரித்திகாவிற்கு அவரது கணவர் மாலத்தீவில் வைத்து சர்ப்ரைஸ் ஒன்றை செய்திருந்தார். கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர் கேக் வெட்டி ஊழியர்களுடன் ரித்திகாவிற்கு சர்ப்ரைஸ் ஒன்றை செய்திருந்தார். கணவருடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ரித்திகா, குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ரித்திகாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பீச் ரெசார்ட்டில் நின்று கொண்டு ரித்திகா மரண குத்தாட்டம் போடுகிறார். அந்த வீடியோவை ரித்திகாவின் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்