விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் பாப்பா நிலா தற்போது ரித்திகாவிற்கு அழகாக உயிர் எழுத்துக்கள் சொல்லிக் கொடுக்கிறது. அந்த வீடியோவை அவரே தற்போது வெளியிட்டு இருக்கிறார். விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் நடித்து வரும் அமிர்தா கதாபாத்திரம் ஒரு விதவைப் பெண் கதாபாத்திரம் ஆகும். இவருக்கு திருமணம் ஆகி நிலா என்கிற ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே கணவர் விபத்து ஒன்றில் இறந்து விடுகிறார். இதனால் கைக்குழந்தையுடன் மாமனார் மாமியாருடனே வசித்து வருகிறார் அமிர்தா. இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அமிர்தாவிற்கும் எழிலுக்கும் காதல் ஏற்பட்டது. பல தடைகளை மீறி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு எழிலின் அம்மா பாக்யா உறுதுணையாக இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எழிலுடன் அவருடைய வீட்டில் வந்து வசிக்கும் அமிர்தாவின் குழந்தை தற்போது அனைவரிடமும் பழகத் தொடங்கி இருக்கிறது. எழில் அமிர்தா திருமணத்தை எழிலின் அண்ணன் செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டி இருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் தற்போது நிலா பாப்பா இவர்கள் இருவரிடமும் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஈஸ்வரி பாட்டியும் செழியனும் மனம் மாறி விடுவார்கள் என்று தெரிகிறது. பாப்பாவை அழைத்துக் கொண்டு செழியன் அழைத்துச் சென்ற ஜெனி, பாப்பாவை அங்கே விட்டுவிட்டு செல்கிறார். பின்னர் கொஞ்சம் மனது மாறும் செழியன் பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதேபோல ஈஸ்வரி பாட்டி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த நிலா பாப்பா அவரது கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்து அவரை கொஞ்சி விளையாடுகிறது. இதனால் ஈஸ்வரி பாட்டியும் கொஞ்சம் மனம் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிக்கும் நிலா பாப்பா இந்த குட்டி வயதிலேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரித்திகா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நிலா பாப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றி இருக்கிறார். அதில் நிலா அழகாக ரித்திகாவிற்கு அ ஆ இ ஈ சொல்லிக் கொடுக்கிறது. இந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O