ராஜா ராணி சீரியலில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த ரியா விஸ்வநாதன் சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது அதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி” தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் நடித்த வந்தார். இவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். ஐபிஎஸ் ஆகவேண்டும் என்கிற மனைவியின் கனவை கணவர் எப்படி நிறைவேற்றுகிறார்? என்பது குறித்த கதை தான் இந்த நாடகம். இதற்காக ரியா கடுமையாக உழைத்து ஐபிஎஸ் வரை ஆகியுள்ள நிலையில். தற்போது திடீரென அவரை மாற்றி விட்டு ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த ஆஷா கவுடாவை புது சந்தியாவாக நாடகக் குழு நியமித்து இருக்கிறது. ஆலியா மானசா, ரியா, விஜே அர்ச்சனா என தொடர்ந்து விலகல்கள் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த நாடகத்தை இயக்கி வந்த பிரவீன் பென்னட்டும் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீரியலில் இருந்து விலகியது குறித்து முதன்முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியிருக்கிறார் ரியா. அதில் தனக்கு ஒரு நாள் கூட லீவு கொடுக்காமல் தன்னை மிகவும் டார்ச்சர் செய்ததாகவும், தன்னால் தூங்க முடியவில்லை, குடும்பத்துடன் நேரம் கூட செலவழிக்க முடியவில்லை, அதனால் தான் சீரியலில் இருந்து விலகி விட்டதாக மனம் திறந்து பேசி இருக்கிறார். கடந்த ஒரு வருட காலமாக நான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் எனக்கு தேதி கொடுப்பதில் சிறிது பிரச்சினை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆலியா மானசா விலகிய போது அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு வீடியோக்கள் இல்லை என்று சொல்லி என்னை முழு நேரமாக வேலை பார்க்க வைத்தார்கள். ஒரு மூன்று மாதங்களுக்கு காலை தொடங்கி இரவு வரை முழு நேரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கு ஆறு மணி உடன் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் நான் மட்டும் இரவு ஒன்பது முப்பது வரை சூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தேன். இதனால் எனது குடும்பத்துடனும் நான் வளர்க்கும் செல்ல பிராணியிடம் கூட என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை.
முதலில் வளசரவாக்கம் பகுதியில் ஷூட்டிங் எடுக்கப்பட்டு கொண்டிருந்தது பின்னர் போலீஸ் ட்ரைனிங்க்காக வண்டலூர் பகுதிக்கு ஷூட்டிங்கை மாற்றினார்கள். காலை 7:30 மணிக்கு ஷூட்டிங் தொடங்கி விடும் என்பதால் நான் வீட்டிலிருந்து ஆறு முப்பது மணிக்கு எழுந்து செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் மாலை ஆறு முப்பதுக்கு மற்றவர்களுக்கு சூட்டிங் முடியும் நிலையிலும் எனக்கு மட்டும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. குறிப்பாக டிரைனிங்கில் அந்த அறையில் சரவணன் ஆங்காங்கே தோன்றும் காட்சிகள் எல்லாம் இரவு 10 மணி வரை சூட்டிங் எடுக்கப்பட்டது. இதனால் என்னால் போனில் கூட என் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை. எனக்கு இது முதல் சீரியல் என்பதால் என்னால் இந்த சூழ்நிலைகளை கையாளவும் தெரியவில்லை. இன்றைக்கு எடுக்கும் சூட்டிங்கை வைத்து தான் அடுத்த நாள் சீரியல் ஒளிபரப்பாகும். எனவே கடைசி நிமிடம் தயாரித்து சீரியல் எடுக்கப்பட்டது தனக்கு மிகவும் மன உளைச்சலாக இருந்தது. உடை மாற்ற கூட நேரம் கொடுக்க முடியாமல் என்னை அவசரப்படுத்தினார்கள்.
இதனால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். மாதத்தில் ஒன்று முதல் 15 நாட்கள் லீவு தர வேண்டும். 15 முதல் 30 நாள் வரை தான் சூட்டிங். ஆனால் எனக்கு ஒன்று முதல் 15 நாட்கள் லீவே கிடைக்காது. ஆறு நாட்கள் மட்டுமே லீவு கிடைக்கும் அதுவும் இடையில் ஒரு நாள் கிடைக்கும். அந்த லீவு போவதே தெரியாது. அடுத்த நாள் கிளம்பி மீண்டும் சூட்டிங்க்கு செல்வது போல் இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இதே நிலைமை தொடர்ந்தது. இதனால் தனக்கு தூக்கம் வரவில்லை. பிரஷர் அதிகமானது. ஸ்ட்ரெஸ் அதிகமானது. இதனால் தனக்கு உடல் எடை ஏறிக்கொண்டே போனது. என்னால் உணவு பழக்கத்தையும் டயட்டையும் ஃபாலோ பண்ண முடியவில்லை. இதனால்தான் சீரியலை விட்டு விலகினேன் ய. நான் சீரியலை விட்டு விலகிய போது புரொடக்ஷன் சைடில் இருந்தோ சேனல் சைடில் இருந்தோ என்னை திருப்பி எடுத்துக் கொள்ள எந்த விதமான முயற்சியையும் அவர்கள் எடுக்கவில்லை. மேலும் சீரியல் மதிய நேரத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. இதனால் இதனால் சீரியல் புகழ் இன்னும் குறையலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஷூட்டிங் எடுக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அடிபட்டு மிதிபட்டு வந்ததாகவும் பலர் இதை பார்த்துவிட்டு டூப் போட்டு நடிப்பவர்கள் தானே என்று சிம்பிளாக கூறிவிட்டு செல்கிறார்கள். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமலேயே போலீஸ் ட்ரைனிங் போன்றவற்றில் நடித்தேன். அப்போது என் கைகள் கூட உடைந்து சிராய்வு ஏற்பட்டது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு நான் நடித்தேன். காந்தாரா படக்காட்சிகள் எடுக்கப்பட்டபோது நள்ளிரவு நேரம். அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தோம். ஆனால் அதை எல்லாம் சிம்பிளாக கலாய்த்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று சோகமாக பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Video Embed Code Credits: Trendglitz