ஜீ தமிழில் செம்பருத்தி என்னும் நாடகத்தில் நடித்து வந்த ஷபானா தற்போது சன் தொலைக்காட்சியில் புது நாடகத்தில் நடிக்க இருக்கிறார். அதற்க்கான ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. ஷபானா 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்கிற நாடகத்தில் ஸ்ரீதேவி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். மும்பையில் படித்த அவர் பின்னர் மலையாள தொலைக்காட்சி தொடர் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒளிபரப்பான செம்பருத்தி என்கிற நாடகம் மூலமாக மக்கள் இடையே மிகவும் பிரபலமானார். இந்த நாடகத்தில் வீட்டு வேலைக்காரியாக பார்வதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அவர் அந்த வீட்டின் உரிமையாளரான கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொள்வது போன்று கதை நகர்ந்து கொண்டிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த தொடரில் ஆரம்பத்தில் நடித்த நடிகர்கள் பலரும் சீரியலை விட்டு ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறத் தொடங்கினர். ஷபானாவும் விரைவில் சீரியலை விட்டு வெளியேற இருக்கிறார் என்கிற தகவல் பரவத் தொடங்கிய நிலையில், திடீரென ஒரு நாள் சீரியலை முடித்து எண்டு கார்டு போட்டு இருந்தனர். இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷபானா.தற்போது இவர்கள் இருவரும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஷபானா. இவர் தற்போது சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார். அதற்கான ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. இந்த ப்ரோமோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார் ஷபானா.

அதில் அவர், “இறுதியாக எங்கள் சீரியலில் புது ப்ரோமோ வெளியாகிவிட்டது, மிஸ்டர் மனைவி என்று என்பதுதான் அந்த சீரியலின் பெயர். ரொம்ப நாள் வெயிட் பண்ணி ரொம்ப சந்தோஷமா எக்ஸைட்டடா இருக்கு இதை போஸ்ட் பண்ணும் போது, உங்களுடைய ஆசீர்வாதங்கள் தேவை, இந்த ப்ராஜெக்ட் குறித்து உங்களிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அடுத்த ப்ரோமோவுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் இந்த சீரியலை என்ஜாய் பண்ணுவீர்கள் என்று உறுதி அளிக்கிறேன். இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்களுக்கு பிடிக்கும். என்னுடைய கதாபாத்திரத்தை நான் ஏற்கனவே காதலிக்க தொடங்கி விட்டேன். உங்களுடைய ஆசிர்வாதங்கள் எனக்கு தேவை. உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை தர நான் முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என்று பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV