விஜய் டிவியில் இருந்து விலகி வேறு தொலைக்காட்சிக்கு சென்ற ரியா விஸ்வநாதன்.! இதோ ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சண்டக்கோழி என்கிற புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ராஜா ராணி சீசன் 2. இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது மோதலும் காதலும் என்கிற புது தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ராஜா ராணி சீசன் 2 வின் நிறுத்தம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. இந்த சீரியலில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரியா விஸ்வநாதன். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலில் இருந்து விலகி இருந்தார். அதனால் ரியா விஸ்வநாதன் தன்னுடைய முதல் நாடகமாக இந்த நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் இருந்து விலகி வேறு தொலைக்காட்சிக்கு சென்ற ரியா விஸ்வநாதன்.! இதோ ப்ரோமோ..! 1
ஆரம்பத்தில் பலரும் ரியாவை ஏற்றுக் கொள்ளாத நிலையில், தனது சிறந்த நடிப்பால் விரைவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவில் இருக்கும் சந்தியா, விதி வசத்தால் இனிப்புக் கடை நடத்தி வரும் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் மனைவியின் ஆசையை கணவர் நிறைவேற்றினாரா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி. இந்த நிலையில் ஐபிஎஸ் ஆவதற்கு ட்ரைனிங் எடுக்கும் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தார் ரியா. அந்த காட்சிகள் அனைத்தும் முடித்துவிட்டு ரியாவை சீரியலில் இருந்து நீக்கி இருந்தனர். வெளியேறிய பின்பு ரியா ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்து இருந்தார். அதில் தனக்கு லீவு கூட கிடைப்பதில்லை, மிகவும் கஷ்டப்பட்ட நடிக்கிறேன், காலையிலிருந்து இரவு வரை சூட்டிங் சூட்டிங் என்று தன்னால் குடும்பத்தினர் கூட நேரம் செலவிட முடியவில்லை என்று சொல்லி நாடகத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது சண்டக்கோழி என்கிற சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.


ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் நடிகர் நியாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த நாடகத்தின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஐஸ்வர்யா கேட்டரிங் என்கிற கடையை நடத்தி வருகிறார் ரியா. நியாஸ் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார். இருவரும் மழைக்காக ஒரு நிழற்குடையில் ஒதுங்கி நிற்கின்றனர். அப்போது மழையில் இறங்கி ஆட்டம் போடுகிறார் ரியா. பின்னர் தனது துப்பட்டாவை கழற்றி வீசுகிறார். அது நியாஸின் முகத்தில் விழுகிறது. அதனால் கோபமான நியாஸ் நீ லூசா என்று சண்டை போடுகிறார். அதற்கு நீ தான் லூசு உங்க அம்மா லூசு உங்க அப்பா லூசு என்று பதிலுக்கு ரியாவும் கோபத்தில் கத்துகிறார். பின்னர் இருவரும் மணக்கோலத்தில் மணமேடையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்