Categories: சினிமா

பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்த அவரது பட நடிகை.! வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு திட்டு

வெளியிட்டது

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை அவரின் படத்தின் நடிகையே தற்போது விமர்சித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனரில் முக்கிய நபராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதன்முதலாக கோமாளி என்கிற படத்தை 2019 ஆம் ஆண்டு இயக்கினார். 90ஸ் கிட்ஸ்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் தற்போது லவ் டுடே என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த 80 கோடி அளவிற்கு வசூலை குவித்து இருக்கிறது. இளம் இயக்குனரான பிரதிப் ரங்கநாதன் தனது இரண்டாவது படமே மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இவருக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்த அவரது பட நடிகை.! வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு திட்டு 1

பல தயாரிப்பாளர்களும் பிரதீப் ரங்க நாதனை அணுகி படங்களை இயக்குமாறு கேட்டுக் கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் பல தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சில காமெடிகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்தது. அந்த வகையில் பிரபல ஆர் ஜேவும் நடிகை ஆனந்தி இந்த படத்தையும் பிரதீப் ரங்கநாதனையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படமான கோமாளி படத்தில் நடித்திருந்தவர் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்திருந்தவர் ஆர்.ஜே ஆனந்தி. தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனரையே தற்போது அவர் விமர்சித்திற்கும் செய்தி வைரல் ஆகி வருகிறது. பெண்களை மோசமானவர்கள் போல் சித்தரிக்கும் வகையில் காமெடி காட்சிகள் அமைந்திருப்பதாக ஆனந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

அவர் கூறும் பொழுது ஹீரோயின் இவானாவின் தங்கைக்கு தவறான மெசேஜ் அனுப்பவில்லை என்று பிரதீப் நிரூபித்த பின்பு அவரை நல்லவன் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதே படத்தில் நடிகையை பதம் பார்க்க வேண்டும் என்று அவர் சொல்லும்போது அதை காமெடி என்று சொல்லி ரசிக்கிறார்கள். சினிமாவில் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் பெண்களை தவறாக சித்தரிப்பீர்கள்? அதை எவ்வளவு நாள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் பிரதீப்பின் முதல் படமான கோமாளி படத்தில் யோகி பாபுவிற்கு மனைவியாகயும், ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Watch the below video.! 

Youtube Video Code Embed Credits: Reflect News Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்