Categories: சினிமா

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வடகறி படத்தில் அறிமுகம் ஆகியவர் ஆர்ஜே பாலாஜி. ஆரம்பத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக பணியாற்றிய இவர் தற்போது சினிமாவில் இயக்குனர் மற்றும் நாயகனாக ஜொலித்து வருகிறார். எல்கேஜி படத்தினை இயக்கி நடித்து சினிமாவில் பெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. மேலும் நயன்தாராவை வைத்து இவர் எடுத்த மூக்குத்தி அம்மன் படமும் ஹிட் கொடுத்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியது..! 1

தற்போது இவர் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இவருக்கு கதாநாயகனாக அடுத்து சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி என பலர் நடித்து உள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகராக ஆர்ஜே பாலாஜி கலக்கி வருவதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : THINK MUSIC INDIA

வெளியிட்டது

புதிய செய்திகள்