திஷா படானி உடன் குத்தாட்டம் போடும் சூர்யா..! வெளியாகியது கங்குவா படத்தின் Second Single இதோ..!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திஷா படானி உடன் குத்தாட்டம் போடும் சூர்யா..! வெளியாகியது கங்குவா படத்தின் Second Single இதோ..! 1

விளம்பரம்

அண்மையில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருந்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் படம் அதிக மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இப்படம் கடந்த அக்டொபர் 10ஆம் தேதி வெளியாக இருந்தது.ஆனால் எதிர்பாராத காரணங்களால் இப்படம் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது.

திஷா படானி உடன் குத்தாட்டம் போடும் சூர்யா..! வெளியாகியது கங்குவா படத்தின் Second Single இதோ..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தில் இருந்து யோலா என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இந்த பாடலில் திஷா மற்றும் சூர்யா ஜோடி செம்ம கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  சர்ச்சைகளுக்கு நடுவே சைலன்ட்டாக சாதித்து காட்டிய மாமன்னன்.! ஒரே வாரத்தில் செய்த புது சாதனை.!

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

விளம்பரம்

Leave a Comment