இப்பொது தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் ட்ரோல் செய்யப்படும் நபராக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உள்ளார். சின்னதிரையில் பல பிரமாண்ட நிகழ்ச்சிகளை டைரக்ட் செய்துள்ள இவர், சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட கலக்கப்போவது யாரு, பிரபல நிறுவங்களுக்காக விருது நிகழ்ச்சிகள் குறிப்பாக ஆனந்த விகடனின் சில விருது நிகழ்ச்சிகள், விஜய் டிவியின் இப்போதைய முன்னணி நிகழ்ச்சி “பிக் பாஸ்” போன்ற நிகழ்ச்சிகள் உருவாகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

சினிமாவில் டைரக்டராக ஆசைப்பட்ட இவருக்கு அது இசையமைப்பாளர் அனிருத் மூலம் கிடைத்தது. நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானார். அடுத்து நீண்ட நாள் நண்பனான நடிகர் சிவகார்த்திகேயனுடன் “டாக்டர்” படம். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய், இளவரசு என பலர் நடித்த இந்த படத்திற்கு மீண்டு அனிருத்தே இசையமைத்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “டாக்டர்” படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி வசூல் எடுத்த படமாக உருவெடுத்தது. அதுமட்டுமின்றி கொரோனா காலகட்ட சிக்கலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை இந்த படம் கொடுத்தது. நிறைய பாராட்டுகளும், விருதுகளும் நெல்சன் வாங்கினார்.
அடுத்த படமே நெல்சனுக்கு நடிகர் விஜயை இயக்குவதற்கு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளங்கள் கொண்ட இந்த படத்திற்கும் அனிருத்தே இசை அமைத்தார். வெளியான இரண்டு பாடல்களும் மிக பெரிய வெற்றியடைந்தன. படம் வெளியாவதற்கு முன்னரே நெல்சன், அனிருத் கூட்டணி நடிகர் ரஜினியுடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக ப்ரோமோ விடியோவும் வெளியிடப்பட்டன. இதனால் “பீஸ்ட்” படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது.
படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. முதல் காட்சியிலேயே சில ரசிகர்கள் ஏமாற்றத்தை தெரிவித்தனர். குறிப்பாக பலரும் நெல்சனின் திரைக்கதை அமைப்பையே பெரிதாக குற்றம் சாட்டின. படம் மிக பெரிய எதிர்ப்பரப்பில் வெளியாகி விஜயின் ஸ்டார் இமேஜால் கொஞ்சம் காலெக்ஷன் பெற்றாலும், விமர்சனங்கள் கடுமையாகவே இருந்தன. படம் விமர்சன ரிதியாக தோல்வி அடைந்ததால் முந்திய படம் “அண்ணாத்தே” கடுமையாக விமர்சிக்க பட்டதால், ரஜினி கொஞ்சம் யோசனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நெல்சன் இயக்கப்போகிறார் என்பதே கூறப்பட்டுவருகிறது.
“பீஸ்ட்” வெளியானது முதலே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நெல்சன், இப்பொது வரையிலும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். பாடம் வெளியாகி 2 மாதங்கள் முடிந்த பின்னும், அவரை விமர்சனம் செய்ய ரசிகர்கள் இன்னும் நிறுத்தவில்லை. இது குறித்து பல சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை ஓப்பனாகவே தெரிவித்துள்ள நிலையில், இப்பொது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நெல்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில், “நெஸ்லான் ஒரு அசாதாரண இயக்குனர்..! நான் அவருடன் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறேன், அவருடைய படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான் ..! அவர் ஒரு அற்புதமான திறமைசாலி..! நிச்சயம் அவர் அடுத்த படங்களில் மிக பெரிய வெற்றியை சந்திக்க போகிறார்..!!!இதை நிறுத்துங்கள் ப்ளீஸ்.” என பதிவிட்டுள்ளார்.
பாலாஜியின் கருத்துக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். நடிகர், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் “வீட்ல விஷேசங்க” மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. காமெடி பின்னனியில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாலாஜியின் பெற்றோர்கள் சத்யராஜும், ஊர்வசி 60வயதில் கர்ப்பமாகின்றனர், அதே சமயம் பாலாஜிக்கு நாயகியான அபர்ணா பாலமுரளிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையை அடிப்படியாக கொண்டு படம் உருவாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் இந்த விமர்சங்களுக்கு மத்தியில் தன்னுடைய அடுத்த படமான “தலைவர் 169” படத்தை சிறப்பாக வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது. படத்தில் ரஜினிகாந்துடன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.