ஆர்கே சுரேஷ் தனக்கு பிறந்த மகன் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் ஆர் கே சுரேஷ். இவர் ஸ்டுடியோ 9 என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2015 ஆம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை மற்றும் முத்தையா இயக்கிய மருது ஆகிய படங்களில் பணிபுரிந்த சுரேஷ் அந்த படங்களில் நடிகராக அறிமுகமானார். ஆர்கே சுரேஷ்சுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யாவிற்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவருக்கும் திருமணம் நிறுத்தப்பட்டது. பின்னர் சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியராக இருக்கும் மதுவை திருமணம் செய்து கொண்டார் ஆர் கே சுரேஷ். இந்த தம்பதியருக்கு “ஐஷார்யா” என்கிற மகள் பிறந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார் ஆர் கே சுரேஷ். சமீபத்தில் விஜய் தேவார கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தை தமிழில் இவர்தான் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார். இவரின் முதல் படம் தாரை தப்பட்டை, அதன் பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படங்களுக்குப் பிறகு இப்படை வெல்லும், ஸ்கெட்ச், டிராபிக் ராமசாமி, நம்ம வீட்டு பிள்ளை, புலிக்குத்தி பாண்டி, விசித்திரன், விருமன், பட்டத்து அரசன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் ஆர் கே சுரேஷ் மேலும் தம்பிக்கோட்டை, சலீம், தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். விநியோகஸ்தராக சாட்டை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கோழி கூவுது, பரதேசி, சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாமனிதன் போன்ற பல நல்ல படங்களை வெளியிடும் உரிமையையும் இவர் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் இவரது மனைவிக்கு பிரம்மாண்ட வளைகாப்பு நடத்தியிருந்தார் ஆர் கே சுரேஷ் இவருக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறார் அவருக்கு ஓஜாஸ்லிங்கா என்று பெயரிட்டு இருக்கிறார். மகன் பிறந்த பொழுது மூச்சு திணறல் பிரச்சனை இருந்ததாகவும் தங்களுக்காக வேண்டிக் கொள்ளும் படியும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மனைவி மதுவும் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மகனிடம் ஆர்கே சுரேஷ் மகனிடம் படுத்திருக்கிறார். அதை பகிர்ந்த அவர் என்னுடைய இதயம், ஆத்மா, எனக்கு நடந்த சிறந்த விஷயம், நான் சிரித்த சிரிப்புகளுக்கும், அழுத அழுகைகளுக்கும் அவன் தான் காரணம். அவன் என்னுடைய மகன், என்னுடைய உலகம், லவ் யூ ஓஜாஸ் லிங்கா சுரேஷ் என்று பதிவிட்டு இருக்கிறார்.அந்த புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O