நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது மனைவிக்கு இன்று வளைகாப்பு நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் பல படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
மேலும் இவர் பல படங்களை தயாரித்தும் வருகிறார். லைகர் படத்தைக் கூட இவர் தான் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார்.
ஆர்கே சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அந்த படத்திற்குப் பிறகு அவர் பல படங்களில் நடித்துள்ளார்.
முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கதாநாயகனை விட வில்லனாக அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். எனவே சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட அவர் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விருமன் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மது என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில் ஆர்.கே சுரேஷின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இதையொட்டி அவர் இன்று மனைவிக்கு வளைகாப்பு நடத்தினார்.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக ரோபோ சங்கரின் மனைவியும் மகளும் கலந்து கொண்டனர்.
ஆர் கே சுரேஷ் பாக்கியலட்சுமி நாடகத்தில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யாவின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.