ரட்சிதாவின் பின்னால் சுற்றிய ராபர்ட் மாஸ்டர்.! காதலை முறித்த 28 வயது காதலி.!

வெளியிட்டது

ரட்சிதாவிடம் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொண்டதால் ராபர்ட் மாஸ்டரின் காதலி தற்போது அவருடனான காதலை முறித்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 40 நாட்களை கடந்து விட்டது. தொடங்கிய நாள் முதலே சண்டை அடிதடி என இந்த சீசன் அதகளப்பட்டு வருகிறது. இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த வாரத்துடன் சேர்த்து 6 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், 15 போட்டியாளர்களுடன் மீதமுள்ள நாட்கள் நகர இருக்கிறது. ஐம்பதாவது நாட்களுக்கு மேல் சிலர் வைல்ட் கார்டு என்ட்ரியாகவும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் முக்கிய போட்டியாளர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். அது ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரட்சிதா. ரட்சிதா விஜய் டிவி ஒளிபரப்பான பல நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரட்சிதாவின் பின்னால் சுற்றிய ராபர்ட் மாஸ்டர்.! காதலை முறித்த 28 வயது காதலி.! 1

இவரும் இவரது கணவர் தினேஷும் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் சிக்ஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ரட்சிதாவிடம் மற்றொரு போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து சில சில்மிஷங்களில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு ரட்சிதா மேல் க்ரஷ் என்றும், அவரை தனக்கு பிடிக்கும் என்றும், செல்லமாக மூக்குத்தி என்றும் அழைத்து வருகிறார் ராபர்ட். இதை வெளியில் இருந்து பார்த்து வந்த ரட்சிதாவின் கணவர் தினேஷ் ராபர்ட் மாஸ்டர் வெளியே போக வேண்டும், அப்போதுதான் ரட்சிதாவால் இந்த விளையாட்டை சிறப்பாக விளையாட முடியும் என்று பேட்டி அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த அரண்மனை டாஸ்க்கில் ராபர்ட்டின் அட்டூழியங்கள் எல்லை மீறியது.

ரட்சிதா கையைப் பிடித்து வில் அம்பு விடுவது போலவும், மேலும் கார்டன் ஏரியாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது அவரை தொட்டு தொட்டு ஆடியது, அப்போதெல்லாம் ரட்சிதா முகம் சுளித்ததும் பலரையும் எரிச்சல் அடைய வைத்தது. குறிப்பாக ராபர்ட் மாஸ்டரின் காதலியாக இருப்பவருக்கும் இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் ஒரு முறை கூறும் போது தனக்கு 28 வயதில் ஒரு காதலி வெளியே இருக்கிறார் என்று பேசி இருந்தார். தற்போது அவர் ராபர்ட் மாஸ்டர் உடனான காதலை முறித்து இருக்கிறார். அதற்கு சாட்சியாக அவர் பிக்பாஸ்க்கு உள்ளே ஒரு பொருளை அனுப்பி அதை உறுதி செய்து இருக்கிறார்.

வெளியில் இருந்த போது காதலிக்கு ஆசையாக வாங்கி போட்ட மோதிரத்தை அவருடைய காதலி ஒரு பாக்ஸில் வைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருக்கிறார். இதை ராபர்ட் மாஸ்டர் குயின்சியிடம் பேசிக் கொண்டிருக்கும் காணொளி தற்போது வைரலாகி இருக்கிறது. இதன் மூலமாக ரட்சிதாவுடன் நெருக்கம் காட்டிய ராபர்ட் மாஸ்டருக்கு டாட்டா காட்டியிருக்கிறார் அந்த இளம் வயது காதலி.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்