பாரதியின் மகள் ஹேமா பாரதிக்கு போன் செய்து என் தந்தை யார் என்று நீங்களாவது கூறுங்கள் என்று பேசியிருக்கும் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் பாரதி உடைந்து அழுகிறார். விஜய் டிவியில் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு முக்கியமான தொடர் தான் பாரதி கண்ணம்மா. இது கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஹீரோ பாரதியை வேறு எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, தான் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதியின் தோழி வெண்பா திட்டம் திட்டி வருகிறார். அதற்காக பாரதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று அவரை ஏமாற்றி வருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பாரதிக்கு திருமணம் நடந்து இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.

ஒரு குழந்தை கண்ணம்மாவிடமும், மற்றொரு குழந்தை பாரதியிடமும் வளர்ந்து வந்தது. தற்போது கண்ணம்மா தான் இந்த இரண்டு குழந்தைகளின் தாய் என்று பாரதியிடம் வளர்ந்த குழந்தைக்கு தெரிய வருகிறது. இதனால் பாரதியை விட்டு பிரிந்து கண்ணம்மாவுடன் அந்த குழந்தை சென்று விட்டது. தற்போது பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்காக பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறுகின்றனர். அப்போது ஹேமாவை அழைக்கும் அவரது ஆசிரியர் நீயும் உன் தந்தை பாரதியை அழைத்து வா என்று கூறுகிறார். ஆனால் அப்போது ஹேமா பாரதி என்னுடைய தந்தை இல்லை என்று அதிர்ச்சி தகவலை கூறுகிறார். மேலும் வீட்டிற்கு வரும் அவர் பாரதிக்கு போன் செய்து பேசுகிறார், அப்போது எனது தந்தை யார் என்று தெரிந்தால் நீங்களாவது கூறுங்கள் என்று பாவமாக கேட்கிறார்.

இதனால் மனம் உடைந்து போன பாரதி கதறி அழுகிறார். தான்தான் அவருடைய அப்பா என்பது தெரிந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கதறி அழுகிறார் பாரதி. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video.!
Youtube Video Code Embed Credits: Vijay Television