பாக்கியலட்சுமி தொடரில் இனியாவை கோபி தன்னுடன் அழைத்து சென்று விட்டார். பின்னாலையே கோபியின் தந்தை ராமமூர்த்தியும் ராதிகா வீட்டிற்கு பெட்டி படுக்கையுடன் சென்றுள்ள ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசியின் கதை என்று இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கதைப்படி ஹீரோ கோபிக்கு இரண்டாவது திருமணம் முடிந்து, அவர் இரண்டாவது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார். முதல் மனைவி தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடந்த பிரச்சனையில் கோபியின் கடைசி மகள் இனியா ஒரு முக்கியமான முடிவை எடுத்திருந்தார்.

இனியா பள்ளிக்கு செல்போன் கொண்டு சென்றிருந்த பிரச்சனையில் வீட்டில் உள்ள அனைவரும் இனியாவை அடிக்க, அதை தட்டி கேட்க சென்ற கோபி இனியாவிடம் தன்னுடன் வருகிறாயா என்று கேட்கிறார். இதனால் இனியாவும் கோபியின் வீட்டிற்கு சென்று விடுகிறார். ஆனால் இதை பாக்யா வீட்டில் உள்ள யாரும் ரசிக்கவில்லை. ஈஸ்வரி பாட்டி உடனே சென்று இனியாவை அழைத்து வருமாறு கூறுகிறார், அதற்குள் தாத்தா பெட்டி படுக்கையுடன் கிளம்புகிறார். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்க, நான் என் பேத்தி இனியா இருக்கும் இடத்தில் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு கோபி இங்கு எதற்காக வந்தீர்கள் என்று ராமமூர்த்தி இடம் கோபமாக கேட்கிறார்.

அதற்கு ராமமூர்த்தி என் பேத்தியை இனியா இருக்கும் இடத்தில் தான் நான் இருப்பேன் என்று கூறி கூறுகிறார். இதனால் கோபி, ராதிகா, இனியா என அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Vijay Television