Categories: சினிமா

இந்த வயசுல லவ் பண்ணலாம்ணு வனிதா கேக்குறது சிரிப்பா இருக்கு.! வனிதாவை பாத்து ஊரே சிரிச்சிது.!

வெளியிட்டது

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் ராபர்ட் மாஸ்டர் பல தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் அவர் ரட்சிதா உடனான காதல், வனிதா பற்றிய தகவல்கள் மற்றும் அசீம், தனலட்சுமி குறித்தும் பல செய்திகளை அவர் பகிர்ந்து இருக்கிறார். மூன்று வயதாக இருக்கும் பொழுதே நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சிறுவயதில் இருந்தே, நடனத்தை முறையாக கற்றுக்கொண்டு இன்று நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். தற்போது பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். உள்ளே சென்றது முதலே ரட்சிதாவை தான் காதலித்து வருவதாகவும், பொதுவாக தான் சீரியல் பார்ப்பதில்லை ஆனால் ரட்சிதாவை முதன்முதலில் டிவியில் பார்த்தபோது யார் இந்த பெண் அழகாக இருக்கிறரே என்று அப்போது முதலே தனக்கு க்ரஷ் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இந்த வயசுல லவ் பண்ணலாம்ணு வனிதா கேக்குறது சிரிப்பா இருக்கு.! வனிதாவை பாத்து ஊரே சிரிச்சிது.! 1

அன்று தொடங்கி அவர் வீட்டில் இருந்த 50 நாட்களும் ரட்சிதா பின்னாலையே சுற்றிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் அவரை எலிமினேட் செய்து வெளியே அனுப்பிவிட்டனர். வெளிய வந்த அவர் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அவர் உள்ளே இருக்கும்போது அவரது முன்னாள் காதலியான வனிதா, தான் அவரை ரெகமெண்ட் செய்து உள்ளே அனுப்பியதாகவும், ஆனால் அவர் உள்ளே சென்ற பின் ரட்சிதாவுடன் சேர்ந்து கொண்டு எச்சத்தனங்களை செய்து வருவதாகவும் கடுமையாக பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்த ராபர்ட் மாஸ்டர் வனிதாவெல்லாம் இதை பத்தி எல்லாம் பேசவே கூடாது, அவருடைய கதை இந்த ஊரே பார்த்துக் கொண்டிருந்தது. காதல் பற்றி பேச வனிதாவிற்கு என்ன அருகதை இருக்கிறது? அவரெல்லாம் இது பற்றி பேசவே கூடாது என்று காட்டமாக பதில் அளித்தார். வனிதா என்னை ரெகமெண்ட் எல்லாம் செய்யவில்லை, பிக்பாஸ் செல்வதற்கு முன்பு போன் செய்து பிக்பாஸுக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஒரு கருத்தை தான் கேட்டேன், ஆனால் அவர் இவ்வாறு அதை திரித்து கூறுகிறார் என்று ராபர்ட் மாஸ்டர் கூறினார்.


பின்னர் ரட்சிதா குறித்து பேட்டி எடுப்பவர் கேள்விகளை கேட்க அதற்கும் நிதானமாக பதில் அளித்தார் ராபர்ட் மாஸ்டர். ரட்சிதாவை பார்த்த உடனேயே எனக்கு டிவியில் பார்த்தபோது பிடித்த முகம் என்பதால் கிரஷ் என்று கூறினேன். ஆனால் உண்மையிலேயே எனக்கு வெளியில் காதலி இருக்கிறார். என்னுடைய காதலி பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர் பிக்பாஸ் வீட்டில் மோதிரத்தை அனுப்பிய போது நான் சற்று பயந்துவிட்டேன், ஆனால் வெளியே வந்த பின்பு அவர் கூறியதாவது, வெளியில் நான் ஒருத்தி உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தினால் ஞாபகப்படுத்தும் விதமாக தான் அந்த மோதிரத்தை அனுப்பியதாகவும், மற்றபடி அவர் என்னுடன் காதல் முறிவு செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும் அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் பிக்பாஸ் வீட்டில் நம்மை எரிச்சல் அடையச் செய்து அதில் குளிர் காயும் நபர்கள் என்றும், அவர்கள் பிக் பாஸை கரைத்துக் குடித்து விட்டு வந்தவர்கள் என்றும் கூறினார்.


மேலும் அசீம் மற்றும் தனலட்சுமி இருவரில் யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது நான் நடுவில் செல்வதே இல்லை, அதற்கான காரணம் அவர்கள் நம் மீது அதை திருப்பி விடுவார்கள். அதை தாங்கும் சக்தி எல்லாம் எனக்கு கிடையாது. நான் பொதுவாகவே அமைதியானவன். ஆனாலும் எனக்கு அதிகமாக கோபம் வரும் அந்த கோபத்தினால் அசிமை அடிக்கே இருப்பேன் ஆனால் எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை என்று கூறினார். ரட்சிதா பின்னால் சுற்றியதற்கு காரணம் அவரை எனக்கு பிடிக்கும் அவ்வளவுதான், கடைசியாக வெளியே வரும் போது கூட அவரை நான் கட்டிப்பிடிக்கவில்லை. அதெல்லாம் வெளியில் எப்படி போகும் என்பது எனக்கு தெரியும். மேலும் விரைவில் எனது காதலியை நான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். இதெல்லாம் ஒரு விளையாட்டுக்காக செய்தது தான் ஆனால் இவர்கள் போடும் எடிட்டிங் வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது என்று ராபர்ட் மாஸ்டர் பேசினார்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்