Categories: சினிமா

மனைவியின் பிறந்தநாளை காதலுடன் கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ரோபோ சங்கர்…!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். இவரின் நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. விஜய்டிவியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார் ரோபோ சங்கர். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவர், அண்மையில் தனது மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்து இருந்தார்.

மனைவியின் பிறந்தநாளை காதலுடன் கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ரோபோ சங்கர்...! 1

தந்தையை போல மகளும் சினிமாவை கலக்கி வருகிறார். அறிமுகமாகிய முதல் படமே தளபதி விஜயின் பிகில். இப்படத்திற்கு பிறகு விருமன் படத்தில் நடித்து கலக்கி இருந்தார். தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து உள்ளார். இதனால் தாத்தா ஆக போகும் மகிழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கர் இருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி ப்ரியாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் ரோபோ சங்கர்.

மனைவியின் 45வது பிறந்தநாளை மகள் மற்றும் மருமகளுடன் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திரஜா வெளியிட்டு உள்ளார். ரோபோ சங்கரின் மனைவி ப்ரியாவை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்