கமல் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரோபோ ஷங்கர்.! பிக்பாஸ் செல்லும் இந்திரஜா.?

வெளியிட்டது

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரோபோ சங்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து கமலஹாசனை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கைத் தொடங்கி இன்று பல படங்களில் நடித்து வருபவர்தான் ரோபோ சங்கர். இவர் சமீப காலமாக அதிக குடியால் உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கமலஹாசன் ரோபோ சங்கருக்கு போன் செய்து பேசியதாக கூறப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கமல் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரோபோ ஷங்கர்.! பிக்பாஸ் செல்லும் இந்திரஜா.? 1

அப்போது கமலஹாசன் ரோபோ சங்கரிடம் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது ரோபோ சங்கர் உடல்நலம் தேறி வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கமலஹாசனின் இல்லத்திற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற ரோபோ சங்கர் கமல் கால்களில் விழுந்து ஆசி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கர் எதற்காக கமலை சந்தித்தார்? என்கிற தகவல் வெளியாகாத நிலையில் இணையத்தில் சில கருத்துக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்றும், அதற்காக கமலை சந்தித்து ஆசி வாங்குவதற்காகவே அவர் சென்றுள்ளார் என்றும் தகவல் கசிந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்