ரோபோ ஷங்கர் மிகவும் உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயுள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு இப்படி ஆகிட்டாரே என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ரோபோ சங்கர். இவர் தற்போது பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் பின்னணி பேசியும் வருகிறார். இவர் நடித்து கடந்த ஆண்டு யுத்த சட்டம், இரவின் நிழல், தி லெஜெண்ட், கோப்ரா ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். பிகில் மற்றும் விருமன் ஆகிய இரு படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் பங்கு பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்த வீடியோவை விஜய் டிவியின் பிரபலங்களாக இருந்த புகழ் மற்றும் பாலா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி இருந்தனர். இந்த வீடியோ வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. இந்த வீடியோ வைரலானது தொடங்கியது முதல் ரோபோ சங்கர் மீது ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த வீடியோவில் அவர் தனது வீட்டில் பச்சை கிளிகள் வளர்ப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதை அடுத்து அவரது வீட்டிற்கு விரைந்த வனத்துறையினர் வீட்டில் இருந்த பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்திருந்தனர். பறவைகளை வீட்டில் கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கும் பொழுது அதனால் சுதந்திரமாக வெளியில் பறந்து செல்ல முடிவதில்லை. இதனால் இனப்பெருக்கம் தடைப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பச்சை கிளிகள் இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பச்சை கிளிகளை வீட்டில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் பச்சை கிளிகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் வீட்டில் யாராவது கிளிகள் வளர்த்தால் அது பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோவில் பச்சை கிளிகள் இருப்பது தெரிய வந்தது. அனுமதியின்றி கிளிகள் வளர்த்ததால் 2.5லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ரோபோ ஷங்கரின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் உடல் எடை மிகவும் குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயிருக்கிறார் ரோபோ ஷங்கர். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.