“கிளைமாக்ஸ் ட்விஸ்டே இவருதான்..முடிவுக்கு வரும் செம்பருத்தி தொடர்”

வெளியிட்டது

இன்றைய தலைமுறையினரை தங்களுடைய அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் கட்டிப்போட முயன்று வருகிறார்கள் தொலைக்காட்சி சேனல். அதிலும் குறிப்பாக விஜய் டிவியும், ஜீ தமிழும் உட்சபட்ச போட்டியில் இருக்கிறார்கள். சீரியலிலேயே வெவ்வேறு மாதிரியான காம்பினேஷன்கள், பிரபல சினிமா முகங்கள், பயங்கர ரொமான்ஸ், ஆக்ஷன் என பலவகையிலும் வித்தியாசம் காட்டி வருகிறார்கள்.

"கிளைமாக்ஸ் ட்விஸ்டே இவருதான்..முடிவுக்கு வரும் செம்பருத்தி தொடர்" 1

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மிக முக்கிய தொடராக இருப்பது “செம்பருத்தி”. ப்ரிமே டைமில் ஒளிபரப்பாகி  வரும் இந்த தொடர் கடந்த சில வருடங்களாகவே ஒளிபரப்ப துவங்கிய முதல் நல்ல விமர்சனங்களையும், ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளது. சினிமா நடிகையை முக்கிய நாயகியாகியது முதல் முக ஷாபனாவை சிறப்பாக நடிக்க வைத்து மிக பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டது.

அதே போல் இந்த தொடரில் நடித்து வந்த ஆதி எனப்படும் கார்த்தியும் தனக்கென தனியாக ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கினார். மிக பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை கொண்ட இருந்த இந்த தொடர் திடீரென கார்த்திக்கின் விலகளால் கொஞ்சம் கொஞ்சமாக மவுசு குறைய துவங்கியது. மாற்று ஹீரோவாக நடிக்க வந்த வரை பெரிதாக மக்களுக்கு பிடிக்காமல் போக, தொய்வு மிக பெரிய அளவில் காணப்பட்டது.

தற்பொழுது 1400 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய வைப்பது தகவல் வெளிவந்துள்ளது.ஷபானா,அக்னி, பிரியா ராமன், ஊர் வம்பு லட்சுமி என பலரும் இணைந்து நடித்து வருகிறார்கள். ஆம், TRP ரேட்டிங் குறைவாலும், அதிக நாட்களாக ஓடிக்கொண்டிருப்பதாலும், வெவ்வேறு புது தொடர்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாலும், ஜீ தமிழ் இந்த தொடரை முடிக்க முடிவுசெய்து அதற்கான வேளைகளில் இறங்கி உள்ளது.

அதில் திரைக்கதையை முடித்து வைக்க முக்கிய பாத்திரத்தில் பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ ஷங்கரை அணுகி, அவரும் நடிக்க வந்துள்ளார். இப்பொது அதற்கான ஒளிபரப்பும் துவங்கியுள்ளது. ரசிகர்கள் ரோபோ ஷங்கரை சின்னத்திரையில் பார்ப்பதால் மீண்டும் TRP ரேட்டிங் கூடும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்