மன்னிப்பு கேட்காமல் மட்டமான விளக்கம் கொடுத்த ரோஹிணி திரையரங்கம்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஏன் உள்ளே விடவில்லை என்பது குறித்து விளக்கத்தையும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்க்கப்பட்ட வீடியோ ஒன்றையும் தற்போது ரோகிணி திரையரங்கம் தனது சமூக வலைத்தளமான twitter பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத நெட்டிசன்கள் பலரும் பைக்காட் ரோகிணி தியேட்டர் என்கிற ஹேஷ்டேக்க்கை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது. இன்று காலை வெளியான சிம்பு நடித்த பத்து தல படத்தை பார்ப்பதற்காக சில நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ரோகிணி திரையரங்கத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர். அப்போது அருகில் இருந்த ஒருவர் கையில் தான் டிக்கெட் வைத்திருக்கிறார்களே? அவர்களை உள்ளே அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியதை அடுத்து ரோகிணி தியேட்டர் மீது எக்கச்சக்க புகார்கள் எழுதத் தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்காமல் மட்டமான விளக்கம் கொடுத்த ரோஹிணி திரையரங்கம்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1
ஏற்கனவே வாரிசு படத்திற்கு வந்தபோது இது போல் தான் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தங்கள் மீது துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால் தான் உள்ளே விடவில்லை என்றும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் சோகத்துடன் பேட்டி அளித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது விளக்கம் அளித்திருக்கும் ரோகிணி தியேட்டர், தீண்டாமை எல்லாம் ஒன்றும் இல்லை இந்த படம் யு/ஏ சான்றிதழ் வாங்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு 12 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியாது என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு வந்திருந்தவர்களில் இரண்டு வயது, ஆறு வயது, எட்டு வயது மற்றும் பத்து வயது குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் சரியான சமயத்தில் படம் பார்க்க வைத்திருக்கிறோம். ஆனால் நிலைமை என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாத அங்கிருந்த சிலர், இப்படியாக மாற்றி பதிவிட்டு விட்டதாக ரோகிணி திரையரங்கம் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து நெட்டிசன்கள் சிலரோ யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட போதிலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்தால் படம் பார்க்க அனுமதிக்கப்படலாம் என்கிற சட்டம் இருக்கும் நிலையில், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அப்படியே அந்த சட்டம் இருந்த போதிலும் தற்போது மட்டும் எப்படி படம் பார்க்க அனுமதித்தீர்கள் என்றெல்லாம் ரோகிணி தியேட்டர் மீது கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ரோகினி தியேட்டரை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி பைகாட் ரோகிணி தியேட்டர் என்கிற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்