இப்போதைக்கு ரிஷப் பந்த் மட்டும் தான் அணியில் ரோஹித் வெளிப்படை!!

இப்போதைக்கு ரிஷப் பந்த் மட்டும் தான் அணியில் ரோஹித் வெளிப்படை!! 1

வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் மிக அற்புதமாக பந்துகளை எதிர்கொண்டு ஆடி இருந்தும் அவர் இந்திய அணியில் அடுத்த போட்டியில் ஆட இன்னும் சில நாட்கள் காத்திருந்து தான் ஆட வேண்டும் என்பதை ரோஹித் சர்மாவின் கூற்று உறுதி செய்துள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைவதற்கு முன்பே.. போட்டி தொடங்கும் முன்பே ரோஹித் சர்மா தனது பேட்டியில் கூறும்போது, “சஞ்சு, ரிஷ்ப பந்த் இருவருமே திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் ஆனால் இன்னும் சிறிது காலம் ரிஷப் பந்த் உடன் ஆடி வருகிறோம், ஏனெனில் இந்த வடிவத்தில்தான் ரிஷப் பந்த் என்பவர் நமக்கு மிகவும் அறியப்பட்டவரானார், இந்த வடிவத்தில்தான் மக்களின் கவனத்தை அவர் ஈர்த்தார்.

விளம்பரம்

இன்னும் சிறிது காலம் அவருக்கு வாய்ப்புகளை வழங்கி அவர் எப்படி ஆடுகிறார் என்பதை தெளிவு படுத்த வேண்டியுள்ளது. அவருக்குக் கூடுதலாக வாய்ப்பு வழங்க வேண்டியுள்ளது. அவர் அதிகம் போனால் 15 போட்டிகளில் ஆடியிருப்பார், அதற்குள் அவர் ஆட்டம் பற்றி மதிப்பிடக் கூடாது. பந்த் திறமை பற்றி தீர்ப்பளிக்க இன்னும் காலம் உள்ளது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை  ஆங்கில கால்வாயை நான்குமுறை இடைவிடாமல் நீந்திய புற்றுநோயில் இருந்து தப்பியவர்!

ஆகவே பேட்ஸ்மெனாக சஞ்சு சாம்சனுக்கு அவ்வப்போது வாய்ப்பளிக்க வாய்ப்பிருந்தாலும் விக்கெட் கீப்பராக சஞ்சு அணியில் முழு அளவில் இடம்பெற இன்னும் காத்திருக்க வேண்டும் என்பதையே ரோஹித் சர்மாவின் இந்தப் பேட்டி நிரூபித்து இருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment