கடந்த நான்கு ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் இந்த வாரத்துடன் நிறைவடைய இருக்கிறது. இதை முன்னிட்டு தற்போது கடைசி ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது ரோஜா சீரியல் குழு. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இரண்டு வருகிறது. அந்த வகையில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கவர்ந்துள்ள ஒரு சீரியல் என்றால் அது ரோஜா தான். இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிகர் சிபு சூரியனும், ரோஜா கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 2022 ஆண்டு வரை நான்காண்டுகள் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் தற்போது நிறைவடைந்துள்ளதாக நேற்று செய்தி வெளியாகிய நிலையில் கடைசி ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது சன் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் நடிகர் சிபு சூரியன். இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சன் டிவியில் கிடைத்தது. ரோஜா சீரியல் மூலமாக பல ரசிகர்களை பெற்றிருந்தார். அதேபோல் பிரியங்கா நல்காரிக்கும் முதல் சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்ற சீரியலாக அமைந்திருந்தது. நடுவில் சிபு சூர்யன் சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் மக்களின் பெரிய ஆதரவு காரணமாக சீரியலில் இருந்து விலகும் முடிவை கைவிட்டு இருந்தார். இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது அர்ஜுன் மற்றும் ரோஜாவின் ரொமான்ஸ் காட்சிகளும், கோர்ட்டில் நடக்கும் வழக்குகளும் தான். இந்த காட்சிகளுக்காகவே பலர் இந்த நாடகத்தை விரும்பிப் பார்த்து வந்தனர். தற்போது இந்த நாடகம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிபு மற்றும் பிரியங்காவே உறுதி செய்திருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஷூட்டிங் என்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்தனர். நான்கு ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி, இது முடிவில்லை தொடக்கம் தான் விரைவில் உங்களை சந்திக்கிறோம் என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்துடன் சீரியல் முடிவடைவதால், கடைசி ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Sun Tv