ரோஜா சீரியல் ரசிகர்ளுக்கு ஷாக் கொடுத்த ஹீரோயின் ப்ரியங்கா..இனிமே நாடகமே வேற மாதிரி.!

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ரோஜா சீரியல். இந்தத் தொடரில் வரும் அர்ஜூன் ரோஜா கதாபாத்திரங்களின் ரொமான்ஸ் சீன்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் பிரியங்கா நல்காரி. இதில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பவர் சிபு சூரியன் இவர் சில நாட்களுக்கு முன்பு சிபு சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சீரியலை விட்டு விலகவில்லை என்று அறிவித்திருந்தார்.இதனால் ரசிகர் குஷியாகி உள்ளனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது புதிய புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஹீரோயின் பிரியங்கா நல்காரி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக காட்சிகள் வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல் ரசிகர்ளுக்கு ஷாக் கொடுத்த ஹீரோயின் ப்ரியங்கா..இனிமே நாடகமே வேற மாதிரி.! 1

பிரியங்கா நல்காரி தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா 3 என தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் 12 படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்துள்ள ஒரு சீரியல் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான் இந்த சீரியலுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு இந்த சீரியலை நெட்டி செங்கல் கலாய்த்து தள்ளுவது உண்டு. பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதாக நெட்டிசன்கள் இந்த சீரியலை கலாய்த்து வருகின்றனர். தசாவதாரம் படத்தில் கமலை விஷ்ணு சிலையுடன் கடலில் தூக்கி வீசும் காட்சிகள் வரும். அதை போலவே அம்மன் சிலை உடன் ரோஜாவை கட்டி கடலுக்குள் தூக்கி வீசுகின்றனர். இந்த காட்சிகளை நெட்டிசன்கள் மரணமாக கலாய்த்து வருகின்றனர். தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவினால் ரசிகர்கள் மிகுந்த ஷாக் ஆகியுள்ளனர். அதற்கு காரணம் இனிமேல் பிரியங்கா ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். அதற்கான ப்ரோமோ வெளியானது அதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

கதைப்படி ரோஜா காணாமல் போய்விட்டார். ரோஜாவை கடலில் கட்டி வீசி விட்டனர் அவர் ஏதோ ஒரு ஊரில் உயிருடன் கரை ஒதுங்குகிறார் ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது அர்ஜுனுக்கு தெரியவில்லை. அதனால் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஒருவரை அணுகுகிறார் அர்ஜுன். அந்த போலீஸ் அதிகாரி ரோஜாவை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இன்னொரு ரோஜாவால் தான் முடியும் என்று இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் அழைத்துச் செல்கிறார். அங்கு பார்த்தால் அவரும் பிரியங்கா நல்காரியாக தான் இருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் ஜெசிக்கா என்றும் காணாமல் போன ரோஜாவை இவர் கண்டுபிடித்து தருவார் என்றும் ப்ரோமோ முடிகிறது. எனவே இனிவரும் நாட்களில் பிரியங்கா நல்காரி ரோஜாவாகவும் ஜெசிக்காவாகவும் இரட்டை வேடங்களில் கலக்கவுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்