பாரதி கண்ணம்மா ரோஷிணியின் முதல் ஆல்பம் பாடல்.! ரொமான்ஸில் பட்டையை கிளப்பிய ரோஷிணி.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவாக நடித்து கொண்டிருந்த ரோஷிணி தற்போது தனது முதல் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. திறமைகளை தேடி கண்டுபிடித்து அவர்களை மக்களிடம் அறிமுகம் செய்வதில் விஜய் டிவி எப்போதும் மற்றவர்களை விடவும் கொஞ்சம் முன்னோடி தான். அதில் இப்போது மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகை ரோஷிணி ஹரிப்ரியன். மாடலிங் செய்து வந்த இவர் நடுவில் சில குறும்படங்கள் நடித்துள்ளார். இவரை 2019 ஆம் ஆண்டு “பாரதி கண்ணம்மா” தொடரில் நாயகியாக களமிறங்கியது விஜய் டிவி. முதல் முறை ஒளிபரப்பான இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் நடிகை ரோஷினி. ஒளிபரப்பான சில வாரங்களிலேயே விஜய் டிவியின் சிறந்த தொடராகவும் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடராகவும் இது மாறியது. ரோஷிணியும் நட்சத்திர அந்தஸ்தை சில மாதங்களிலேயே அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா ரோஷிணியின் முதல் ஆல்பம் பாடல்.! ரொமான்ஸில் பட்டையை கிளப்பிய ரோஷிணி.! 1

வேகமாக வளர்த்து வந்த இந்த தொடரின் ஜோடிகளாக நடித்த அருண் பிரசாத் மற்றும் ரோஷினி மக்களின் மனம் கவர்ந்த முக்கிய சின்னத்திரை ஜோடியாக மாறினார்கள். சில மாதங்களிலேயே TRP ரேட்டிங்கிலும் இந்த தொடர் விஜய் ரவியின் மற்ற தொடர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு சென்றது. மாநிறமாக உள்ள இவரது தோற்றமே இவரின் இந்த பெரிய வெற்றிக்கு மிக பெரிய உதவி செய்தன. இந்த தொடரில் நடிக்கும் போதே நடுவில் சில குறும்படங்கள், விளம்பர படங்கள் போன்றவற்றில் நடித்து மிக பெரிய அளவில் மக்களில் ரசிக்கப்பட்டார். படவாய்ப்புகள் வர துவங்க 2021ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து திடீரென விலகினார் ரோஷினி. உண்மையில் இவர் விலகியவுடன் கொஞ்சம் TRP ரேட்டிங் இந்த தொடருக்கு குறைந்து தான் போனது. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலக்கினார்.


தற்போது ரோஷிணி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர் முதல் முறையாக ஒரு ஆல்பம் பாடலில் நடித்து இருக்கிறார். அந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே தற்போது மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!

Youtube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்