நேற்று சிவராத்திரியை முன்னிட்டு நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்தில் நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது. உலகம் எங்கிலும் நேற்று மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. வருடா வருடம் ஈஷா யோகா மையத்திற்கு வரும் தமன்னா அங்கு நடனம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதேபோல் இந்த முறையும் அவர் நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் 2005 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அடுத்த ஆண்டு கேடி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வியாபாரி, கல்லூரி, அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, கோ போன்ற பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மனங்களின் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது பாகுபலி தான். இந்த படத்தில் வீரப் பெண்ணாக அவர் நடித்து அசத்தியிருப்பார். தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் போலோ சங்கர் என்கிற படத்திலும், தமிழில் ஜெய்லர் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தி படம் ஒன்றிலும் மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகி இருக்கிறார் தமன்னா. இந்த நிலையில் வருடா வருடம் ஈஷா யோக மையத்திற்கு வருகை தரும் அவர் சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அங்கு ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து அவர் நடனம் ஆடும் வீடியோக்களும் இணையத்தில் பிரபலமாக வலம் வருவது உண்டு. அந்த வகையில் இந்த வருடமும் அவர் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்தார். இதில் பல தென்னிந்திய நடிகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா என பல நடிகைகள் பக்தைகளாக இருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் கூடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்தில் சமந்தா, காஜல் அகர்வால் போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும், காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது என்பதாலும் இருவரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தமன்னா தவறாமல் இந்த முறையும் விசிட் அடித்து இருக்கிறார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து ஈஷா யோகா மையத்திற்கு வந்திருக்கின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து சிவராத்திரி இரவில் நடனம் ஆடி இருக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O