“பாப்பா பொறந்தாச்சு”!! நாம் இருவர் நமக்கு இருவர் நாயகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! இன்ஸ்டாவில் போட்டோ பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாயகி

"பாப்பா பொறந்தாச்சு"!! நாம் இருவர் நமக்கு இருவர் நாயகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! இன்ஸ்டாவில் போட்டோ பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாயகி 1

விஜய் டிவியின் ஒவ்வொரு தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கமான ஒன்றே. மிர்ச்சி செந்தில் முதன் முதலில் நடித்த ‘சரவணன் மீனாட்சி” மிக பெரிய வெற்றியை மட்டுமின்றி அவருக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையையும் கொடுத்தது. அதன் பின் நீண்ட காலமாக நடிக்காமல் இருந்தவர் மீண்டும் விஐய் டிவியில் ஒளிப்பரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

விளம்பரம்

"பாப்பா பொறந்தாச்சு"!! நாம் இருவர் நமக்கு இருவர் நாயகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! இன்ஸ்டாவில் போட்டோ பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாயகி 3

அவருடன் இந்த தொடரில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க வந்தவர் தான் நடிகை ரோஷினி ஜெயராஜ். கன்னட சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருந்த இவரை, விஜய் டிவி இந்த தொடரின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியது. கன்னடத்தில் “மது மகளு”, “ஜஸ்ட் மாத் மாத்தலி”, “விதி”, “ஜோதே ஜோதியள்ளி” போன்ற பல சூப்பர் ஹிட் நாடகங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருத்தள்ளார். மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் இவருக்கென தனி அடையாளத்தையும், ரசிகர் கூட்டத்தையும் தமிழகத்திலும் பெற்றுக்கொடுத்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  தொடர்ந்து நடந்த போராட்டம்! ரூ.88 கோடி இழப்பை சந்தித்த ரயில்வே!!

"பாப்பா பொறந்தாச்சு"!! நாம் இருவர் நமக்கு இருவர் நாயகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! இன்ஸ்டாவில் போட்டோ பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாயகி 5

விமான ஓட்டுநரான ரிச்சி என்பவரை இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி, கிறிஸ்துவ முறைப்படி சென்னையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்த பின்னும் கன்னட நாடங்கங்களில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தான் கர்பமாக இருப்பதாக கூறி தொடர்களில் நடிப்பதை கொஞ்ச காலம் நிறுத்தி கொண்டார் நடிகர் ரோஷினி.

விளம்பரம்

"பாப்பா பொறந்தாச்சு"!! நாம் இருவர் நமக்கு இருவர் நாயகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! இன்ஸ்டாவில் போட்டோ பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாயகி 7

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டோஷூட் நடந்தி வெளியிட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை தந்தையர் தினத்தில் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தன்னுடைய இன்ஸ்டா பதிவில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

விளம்பரம்

"பாப்பா பொறந்தாச்சு"!! நாம் இருவர் நமக்கு இருவர் நாயகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! இன்ஸ்டாவில் போட்டோ பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாயகி 9

விளம்பரம்

Leave a Comment