“தேடி வந்த கெளரவம்….பாராட்டுகளை குவிக்கும் கண்ணம்மா ரோஷினி”!!

வெளியிட்டது

திறமைகளை தேடி கண்டுபிடித்து அவர்களை மக்களிடம் அறிமுகம் செய்வதில் விஜய் டிவி எப்போதும் மற்றவர்களை விடவும் கொஞ்சம் முன்னோடி தான். இன்றைய தமிழ் சினிமாவின் சிறந்த ஆளுமைகள் சிவகார்த்திகேயன், சந்தானம், அருண்ராஜா காமராஜா, யோகிபாபு, புகழ் போன்றோர் இங்கிருந்த அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் சிறந்து விளங்கினார். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சி நபர்களும் மக்களுக்கு மிகவும் பரிட்சயம்.

"தேடி வந்த கெளரவம்....பாராட்டுகளை குவிக்கும் கண்ணம்மா ரோஷினி"!! 1

அதில் இப்பொது மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். மாடலிங் செய்து வந்த இவர் நடுவில் சில குறும்படங்கள் நடித்துள்ளார். இவரை 2019 ஆம் ஆண்டு “பாரதி கண்ணம்மா” தொடரில் நாயகியாக களமிறங்கியது விஜய் டிவி. முதல் முறை ஒளிபரப்பான இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் நடிகை ரோஷினி. ஒளிபரப்பான சில வாரங்களிலேயே விஜய் டிவியின் சிறந்த தொடராகவும் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடராகவும் இது மாறியது.

ரோஷிணியும் நட்சத்திர அந்தஸ்தை சில மாதங்களிலேயே அடைந்தார். வேகமாக வளர்த்து வந்த இந்த தொடரின் ஜோடிகளாக நடித்த அருண் பிரசாத் மற்றும் ரோஷினி மக்களின் மனம் கவர்ந்த முக்கிய சின்னத்திரை ஜோடியாக மாறினார்கள். சில மாதங்களிலேயே TRP ரேட்டிங்கிலும் இந்த தொடர் விஜய் ரவியின் மற்ற தொடர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு சென்றது.

மாநிறமாக உள்ள இவரது தோற்றமே இவரின் இந்த பெரிய வெற்றிக்கு மிக பெரிய உதவியை செய்தன. இந்த தொடரில் நடிக்கும் போதே நடுவில் சில குறும்படங்கள், விளம்பர படங்கள் போன்றவற்றில் நடித்து மிக பெரிய அளவில் மக்களில் ரசிக்கப்பட்டார். படவாய்ப்புகள் வர துவங்க 2021ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து திடீரென விலகினார் ரோஷினி. உண்மையில் இவர் விலகியவுடன் கொஞ்சம் TRP ரேட்டிங் இந்த தொடருக்கு குறைந்து தான் போனது. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலக்கினார்.

இப்பொது சிறப்பாக செயல்படும் பெண்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வரும் “She” விருதுகள் இவருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான விருதினை அளித்து சிறப்பித்துள்ளது.  இந்த விருதுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் “Grateful” என கேப்ஷன் இட்டு பகிர்ந்துள்ளார். அந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிய ரோஷினி இப்பொது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்