Categories: உலகம்

ஆண்டிற்கு ரூ. 185 கோடி! யூ. டியூபில் வருமானத்தை பெரும் சிறுவன்!!

வெளியிட்டது
ஆண்டிற்கு ரூ. 185 கோடி! யூ. டியூபில் வருமானத்தை பெரும் சிறுவன்!! 1

‘யூ டியூப்’ சேனல் மூலம் உலக அளவில் அதிகமாக வருமானத்தை ஈட்டும் நபர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில் நடப்பாண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் வெளியிட்டிருந்தது.

அதில் அமெரிக்க நாட்டை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயதுடைய சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடியே 98 லட்சத்து 55 ஆயிரம்) வருமானத்தை ஈட்டி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளான்.

ரியானுடைய பெற்றோர்கள் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து ‘ரியான் வேர்ல்ட்’ என்ற பெயரில் யூ டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்கள். சிறுவர்களின் விளையாட்டு பொம்மைகளை மதிப்பாய்வு செய்து ரியான் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது இந்த சேனலுக்கு 2 கோடியே 30 லட்சம் சப்ஸ்கிரைபர் உள்ளனர். ரியானின் பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. ரியான் தற்போது சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனைகளையும் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.

இவரை அடுத்து ரஷியாவை சேர்ந்த 5 வயது சிறுமியான அனஸ்டாசியா ராட்ஜின்ஸ்காயா 18 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 128 கோடி) வருமானத்துடன் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறாள்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்