Categories: சினிமா

ருத்ரன் படத்தில் இருந்து அடுத்த சிங்கிள் பாடல் “ஜோர்த்தலே” வெளியானது.! இதோ வீடியோ..!

வெளியிட்டது

ருத்ரன் படத்தில் இருந்து தற்போது ஜொர்த்தாலே என்கிற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. நடன இயக்குனராக இருந்து பின்னர் மாஸ் ஹீரோவாக மாறி இருப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காஞ்சனா 3. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தற்போது ராகவா லாரன்ஸ் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பல 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பப் படமாக இருந்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் லாரன்ஸ் உடன் இணைந்து நடிகை ராதிகா சரத்குமார், கங்கணா ராவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இரண்டாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் பாகம் இரண்டில் நடித்து வருகிறார். டபுள் x என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ருத்ரன் படத்தில் இருந்து அடுத்த சிங்கிள் பாடல் "ஜோர்த்தலே" வெளியானது.! இதோ வீடியோ..! 1
தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அதிகாரம் திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் பொல்லாதவன் ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த எஸ் கதிரேசன் முதன்முறையாக ருத்ரன் என்கிற திரைப்படத்தை இயக்குவதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் என்கிற தாயரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர், சரத்குமார் ஆகியோரை வைத்து ருத்ரன் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் இந்த படம் முழு ஆக்சன் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.


ஏற்கனவே படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரைலர், டீசர் என்று வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜொர்த்தாலே என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்த பாடல் பிக்பாஸில் கலந்து கொண்ட கானா பாடகர் அசல் கோளாறால் பாடப்பட்டிருந்தது. தற்போது இந்த பாடலை படத்தில் வைத்துள்ளனர். வரிகளையும் அசல் கோளாறு எழுதி இருக்கிறார். இந்த பாடலுக்கு செம்ம துள்ளலாக ராகவா லாரன்ஸ் நடனம் ஆடி இருக்கிறார். அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Five Star Creations

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்