வேட்டியை மடித்துக்கொண்டு மரண குத்தாட்டம் போட்டுள்ள ஆர்யா.! First Single ப்ரோமோ வெளியானது.!

நடிகர் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் என்கிற படத்திலிருந்து தற்போது முதல் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தர லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போட்டு இருக்கிறார் நடிகர் ஆர்யா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ராஜா ராணி உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்து தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வசந்த முல்லை. படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் பல பட தயாரிப்பாளராகவும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை விநியோகமும் செய்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்டியை மடித்துக்கொண்டு மரண குத்தாட்டம் போட்டுள்ள ஆர்யா.! First Single ப்ரோமோ வெளியானது.! 1

விளம்பரம்

தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம். இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம் ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. விருமன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கிராமத்து கதையம்சத்தை கொண்ட படத்தை இயக்குகிறார் முத்தையா. வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக கவனம் பெற்ற நடிகை சித்தி இதானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி பூஜை உடன் தொடங்கியிருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. அதில் கருப்பு நிற உடையுடன் தாடி மீசையுடன் கிராமத்து நாயகன் கெட்டப்பில் தொடை தெரியும்படி வேட்டியை கட்டிக்கொண்டு நாற்காலியில் கெத்தாக அமர்ந்திருக்கும் ஆர்யாவின் பின்புறம் ரஜினியின் பாட்ஷா புகைப்படமும் வரையப்பட்டிருந்தது.

தொடர்புடையவை  அறிவு, எப்பவும் நீ ஜெயிக்கணும்னு தான் நான் நினைக்கிறேன்.! நண்பனுக்காக மனம் உருகி பேசிய தீ

வேட்டியை மடித்துக்கொண்டு மரண குத்தாட்டம் போட்டுள்ள ஆர்யா.! First Single ப்ரோமோ வெளியானது.! 3

விளம்பரம்

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று இருந்த நிலையில், தற்போது முதல் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தவுலத்தான ரவுடி என்கிற அந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வேட்டியை மடித்துக்கொண்டு தர லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போடுகிறார் ஆர்யா. இந்த படத்தின் முழு பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Junglee Music Tamil

விளம்பரம்

Leave a Comment