Categories: சினிமா

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படம் எப்படி இருக்கிறது.? பொது மக்கள் கூறிய விமர்சனம் இதோ.!

வெளியிட்டது

பல தடைகளை மீறி இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ருத்ரன் திரைப்படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். சிலர் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கூறி வருகின்றனர் இன்னும் சிலரோ படம் நன்றாக இல்லை, காமெடி படம் போல இருக்கிறது என்று நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். நடன இயக்குனராக இருந்து பின்னர் நடிப்பின் மீது இருக்கும் ஆசை காரணமாக நடிக்கத் தொடங்கியவர் ராகவா லாரன்ஸ். நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் சில படங்களில் பாடியும் இருக்கிறார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2007 ஆம் ஆண்டு வெளியான முனி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்ததால் தொடர்ந்து பல பேய் படங்களில் நடித்தார். காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படம் எப்படி இருக்கிறது.? பொது மக்கள் கூறிய விமர்சனம் இதோ.! 1
தற்போது கைவசம் ருத்ரன், துர்கா, அதிகாரம், சந்திரமுகி 2, ஜிகர்தண்டா பாகம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரன் திரைப்படம் தற்போது முடிந்து இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த எஸ் கதிரேசன் இந்த படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, பின்னணி இசைக்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் டப்பிங் பிரச்சினைகள் காரணமாக நீதிமன்றம் இன்று படம் வெளியாவதற்கு தடை விதித்து இருந்தது. பின்னர் கடைசி நிமிடத்தில் நீதிமன்ற தடைகள் அனைத்தும் நீங்கி படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.


இந்த படம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். சிலர் படம் நன்றாக இருப்பதாகவும், ராகாவா லாரன்ஸின் நடிப்பு பிரமாதமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். சிலர் படம் நன்றாக இல்லை, ஆக்‌ஷன் படம் என்று நம்பி வந்தால் காமெடி படத்தை காட்டுகிறார்கள் என்று கலாய்த்தும் வருகின்றனர். நீங்களும் அவர்கள் கூறிய அந்த விமர்சன வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: News Reel 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்