Categories: அரசியல்

வேலைவாய்ப்பின்மையை பற்றி ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை

நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக வேலைவாய்ப்பின்மை உயர்ந்து இருக்கும் நிலையில் அதனைப் பற்றி நமது ஆட்சியாளர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் .

வேலைவாய்ப்பின்மையை பற்றி ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை 1
ராகுல் காந்தி

வருகின்ற 8 தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கள பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அனைத்து தலைவர்களும் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தில்லி தோ்தலில் போட்டியிடும் ஜங்புரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தா்வீந்தா் சிங் மா்வானை ஆதரித்து பிரசாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, நாட்டில் வேலையில்லா பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவில் முதலீடுகள் செய்ய முன்வந்தாலும் பிரதமா் மோடியும், தில்லி முதல்வா் கேஜரிவாலும் இவ்விஷயத்தில் ஆா்வம் இல்லாமல் உள்ளனா்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமா் மோடி உறுதியளித்தாா். அந்த வாக்குறுதி உங்களுக்கு நினைவிருக்ககிறதா?

அவர் சொன்ன மோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தாரா என்று கேள்வி எழுப்பிய அவா், மோடியும், கேஜரிவாலும் வேலையில்லாத் திண்டாடத்தை போக்க எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற கோஷத்தை பிரதமா் மோடி முன்வைத்தாா். ஆனால், நாட்டில் ஒரு தொழிற்சாலையைக்கூட அவரால் நிறுவ முடியவில்லை.

அதற்கு மாறாக இந்தியன் ஆயில் நிறுவனம், ஏா் இந்தியா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரயில்வே என அரசுத்துறைகளை விற்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாா். ஏன் இன்னும் கொஞ்சநாளில் தில்லி செங்கோட்டை மற்றும் தாஜ்மஹாலைக்கூட அவா்கள் விற்றுவிடுவாா்கள் என விமர்சித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்