திடீரென விற்கப்படும் விஜய் டிவி.? வாங்க போட்டி போடும் 3 நிறுவனங்கள்.! இதுதான் காரணமா.?

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொலைக்காட்சியை தற்போது டிஸ்னி நிறுவனம் விற்று விட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியை வாங்குவதற்கு இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களாக இருக்கும் சோனி, டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த விஜய் தொலைக்காட்சி, பின்னர் முழு நேரமாக சீரியல்களை ஒளிபரப்பி இல்லத்தரசிகளின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. மதியம் தொடங்கும் சீரியல்கள் இரவு பத்து மணி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

திடீரென விற்கப்படும் விஜய் டிவி.? வாங்க போட்டி போடும் 3 நிறுவனங்கள்.! இதுதான் காரணமா.? 1

ஆரம்பத்தில் நாடகங்கள் என்றாலே சன் தொலைக்காட்சி மற்றும் டிடி தூர்தர்ஷன் என்று இருந்த நிலைமையை மாற்றி தற்போது விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் என பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நாடகங்களை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியும் நாடகங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தற்போது மக்கள் மனங்களில் சன் டிவிக்கு நிகரான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியை டிஸ்னி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பல நாடகங்கள் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காத காரணத்தினால் தற்போது இந்த தொலைக்காட்சியை விற்க டிஸ்னி குழுமம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டிஸ்னி நிறுவனம் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இணையதளங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

தற்போது hotstar தளத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியை விற்பதற்கு டிஸ்னி குழுமம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம், சோனி நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் விஜய் தொலைக்காட்சியை வாங்க போட்டி போட்டுக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. ஜியோ நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலை பேசி இருப்பதாகவும் எப்படியாவது விஜய் தொலைக்காட்சியை வாங்கிவிட ஜியோ நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே ஜியோ நிறுவனத்திற்கு என்று தனியாக ஓடிடி நிறுவனமும் இருக்கிறது. இதனால் தொலைக்காட்சியையும் வாங்கி விட்டால் ஜியோ நிறுவனத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே ஜியோ நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.!

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் ஜியோ நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை வாங்கிய பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்