Categories: சினிமா

காதலரை பிரிந்தாரா தமன்னா..! திருமணம் குறித்த கேள்விக்கு அதிர்ச்சி பதிலை கொடுத்த நடிகை தமன்னா..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் கல்லூரி படத்தின் மூலம் சினிமாவுக்குள் நாயகியாக அறிமுகம் ஆகியவர் நடிகை தமன்னா. முன்னதாக கேடி படத்தில் வில்லியாக நடித்து தனது நடிப்பால் மிரட்டி இருப்பார். முதல் படமே வில்லி என ஆரம்பித்து அடுத்தப்படத்தில் சாந்தமான கதாநாயகியாக நடித்து தமன்னா பட்டையை கிளப்பி உள்ளார். இந்த படத்திற்கு பிறகு தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார் தமன்னா.

காதலரை பிரிந்தாரா தமன்னா..! திருமணம் குறித்த கேள்விக்கு அதிர்ச்சி பதிலை கொடுத்த நடிகை தமன்னா..! 1

தமிழில் கிடைத்த வெற்றி தமன்னாவை தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவுக்கு அழைத்து சென்றது. பாலிவுட்டில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார். ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம், ஊ சொல்றியா பாடலுக்கு ஆடிய சமந்தாவையே மறக்க வைத்து இருந்தது. இப்படி பிசியாக சினிமாவை வலம் வரும் தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார்.

பல நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஜோடியாக வருகை தந்து கலக்கி இருந்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலாக காத்து வந்தனர். அதன்படி தற்போது இவர் திருமணம் குறித்து அண்மையில் பேசிய தமன்னா, தற்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை என கூறியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனரா என்ற எண்ணம் ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்