விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். பல ஆண்டுகளாக பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் டிவி புகழை உயர்த்தியதற்கு இந்த நிகழ்ச்சியும் முக்கிய காரணம் ஆகும்.தற்போது உச்சத்தில் இருக்கும் சினிமா நடிகர் சிவகார்த்திகேயனை அடையாளப்படுத்தியதும் இந்த நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி அன்று முதல் இன்றுவரை மாறாத பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் யார் போட்டியாளராக வந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெறுவது வழக்கம். சொல்லப்போனால் அவர்கள் ஒரு செலிபிரிட்டி என்றே சொல்லலாம்.அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி பலரையும் சினிமாவில் உயர்த்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9வது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் தான் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.

இந்த சீசன் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்து இருந்தது. பல பாடல்களையும் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார் பிரியா ஜெர்சன்.இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றியை பெறாவிட்டாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று இருந்தார்.தற்போது இவர் கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவரை காதலித்து திருமண நிச்சயம் செய்துகொண்டுள்ளார்.

இவர்கள் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. தற்போது சென்னையில் இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்ற நிலையில், சூப்பர் சிங்கர் பிரபலங்கள் கலந்துகொண்டு மனமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
