நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் விஜய் குறித்தும் அவரது மனைவி சங்கீதா குறித்தும் பல தகவல்களை பகித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் “நான் கடவுள் இல்லை” என்கிற படத்தை இயக்கியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர். அந்த படம் குறித்து ஒரு முழுமையான பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் விஜய் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக விஜய்க்கும் தனக்கும் ஏன் சண்டை என்பது குறித்து முழுமையாக விளக்கம் அளித்து இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர். விஜய் பற்றி பேச தொடங்கிய அவர் விஜய் வருடத்திற்கு ஒருமுறை மேடையில் ஏறி குட்டி கதை சொல்வதைப் பார்த்தால் தனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது, வாழ்க்கையில் மிக அடிபட்ட ஒருவரால் தான் அவ்வாறு பேச முடியும். விஜய் அதற்குள் இவ்வளவு அனுபவத்தை பெற்று விட்டாரா? என்று தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் விஜய்க்கு பொறுப்பு ஏறிக்கொண்டே போகிறது என்று விஜய் குறித்து பேசத் தொடங்கினார்.

பின்னர் பேச தொடங்கிய அவர் விஜய்க்கும் தனக்கும் என்ன பிரச்சனை என்பது குறித்து விளக்கினார். அப்போது பசங்க பொதுவாகவே அம்மா பிள்ளையாக தான் இருப்பார்கள், ஆனால் விஜய் பொருத்தவரைக்கும் அதற்கு நேர்மாறாக இருப்பார். அவர் என்னிடம் அதிகம் பேச மாட்டார். இருந்தாலும் என் மீது அவ்வளவு அன்பு வைத்திருப்பார். நான் அவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். அவர் சிறு வயதாக இருக்கும்பொழுது அரை டவுசர் போட்டுக் கொண்டு இருப்பார். அப்பொழுது ஹோம் ஒர்க் செய்யவில்லை என்றால் ஸ்கேலை எடுத்து நானே அவரை பலமாக அடித்து விடுவேன். பின்னர் நானே அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் போட்டு அவரை சமாதானப்படுத்துவேன். அப்படித்தான் நான் அவரை பார்த்து பார்த்து வளர்த்தேன். இன்று கூட நான் அவரை அதே நிலையில் தான் வைத்துப் பார்க்கிறேன். அவர் இன்னும் எனக்கு குழந்தையாக தான் இருக்கிறார். இதுதான் என்னுடைய தவறாக நான் நினைக்கிறேன், இந்த பிரிவுக்கு அது கூட காரணமாக இருக்கலாம், நீங்கள் கூட அப்படி நினைக்கலாம். அது என்னுடைய தவறுதான். ஆனால் என் பிள்ளை மீது இருக்கும் பாசத்தினால் இது போன்ற தவறுகள் ஏற்பட்டதாக நான் கருதுகிறேன்.
முதலில் எனக்கு சினிமா, பிறகு விஜய், பிறகு தான் என் மனைவி ஷோபா. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் பொழுது கூட முதலில் என் பெயரை சொல்லுவேன். பின்னர் விஜய் பெயரை சொல்லுவேன், அதன் பின்னர் தான் சோபா பெயரை கூட சொல்லுவேன். அந்த அளவிற்கு நான் என் மகனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. மேலும் என் மருமகள் சங்கீதா பிள்ளைகளை மிக கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் கவனித்துக் கொள்கிறார். பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போவது, மீண்டும் பள்ளியில் இருந்து அழைத்து வருவது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது என்று அவர் பிள்ளைகளின் ஒவ்வொரு வேலையும் பார்த்து பார்த்து கவனிக்கிறார். எங்கள் வீட்டிற்கு வரும்போது கூட நாங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்தால் பிள்ளைகள் அவர் தாயார் சொன்னால் தான் வாங்கிக் கொள்ளும். அந்த அளவிற்கு மிகவும் ஒழுக்கத்துடன் பிள்ளைகளை வளர்த்து வருகிறார் சங்கீதா என்று மருமகள் பற்றியும் பெருமையாக பேசினார் எஸ் ஏ சந்திரசேகர்.
தான் தனது மகனை ஒரு ஹீரோவாக கொண்டு வரும்போது சில கணக்குகளை போட்டிருந்தேன். அவர் முதல்நாள் ஷூட்டிங்கை முடித்து வெளியே வந்தபோது அவரது தாயார் சோபாவிடம் சென்று ஒருநாள் உன் பிள்ளை பெரிய ஆளாக வருவான் என்று கூறினேன். இந்த படம் ஓடாவிட்டால் கூட விஜய் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று கூறினேன். அதுபோல இப்பொழுது அவர் மிகப்பெரிய நடிகராக மாறிவிட்டார். நீங்கள் எல்லாம் இப்போதுஅவரை தளபதி என்று கூப்பிடுகிறீர்கள், நாங்களே அவரை அண்ணாந்து பார்ப்பதாக ஆகிவிட்டது. இரண்டாவது படத்தில் ராதாரவி ஸ்ரீதேவியுடன் ஷூட்டிங்கின் போது அவர் ஒரே ஷாட்டில் நடித்து முடித்து கொடுத்தார். அதை பார்த்த ராதா ரவியும் ஸ்ரீதேவியும் உன் மகன் கண்டிப்பாக பெரிய ஆளாக வருவார் என்று என்னிடமே நேரில் வந்து கூறினார்கள். என்னுடைய மகனை நான் அறிமுகப்படுத்தினேன். அதற்காக நான் மிகவும் உழைத்தேன். இளைஞர்களை கவரும் விதமாக அவருக்கு உந்துதல் அளித்துக்கொண்டே இருந்தேன். இன்று நீங்கள் எல்லாம் புகழும் வண்ணம் என்னுடைய மகன் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் என்று பெருமையாக பேசி முடித்தார்.
பல வருடங்களாக சந்திரசேகரும் எஸ்ஏசியும் பேசிக் கொள்வதில்லை என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதை தற்போது சந்திரசேகரே உறுதிப்படுத்தி இருக்கிறார். அவர் பேசும் பொழுது, அவரது தாயார் ஷோபா, விஜய் வீட்டிற்கு செல்வதும் பேசிக் கொள்வதுமாக இருக்கிறார், நான் தான் அவ்வாறு பேசுவதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். விரைவில் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் சண்டைகள் அனைத்தும் நீங்கி இருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.!