நேற்று தமிழகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான ருத்ரன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார். பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் உரிமையாளரும் தயாரிப்பாளருமான எஸ் கதிரேசன் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறிய விமர்சனம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞர்களின் தாய் தகப்பன்களை சந்தேகம் வர முடியாதபடி கொலை செய்துவிட்டு அவர்களின் சொத்தை எழுதி வாங்குவது தான் வில்லன் சரத்குமாரின் வேலை் அதைப்போல் ஹீரோ அம்மா அப்பாவையும் கொலை செய்துவிட்டு அவர்கள் சொத்தை எழுதி வாங்குகிறார் சரத்குமார். அவரை பழி வாங்குவதற்காக ஹீரோ வருகிறார். பழிவாங்குகிறேன் என்று சொல்லிவிட்டு படம் பார்த்த நம்மையெல்லாம் பாடாயப்படுத்தி இருக்கிறார்கள். டிரைலரை பார்த்த பொழுதே லேசாக கருகுன வாடை வீசியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் காட்சியை பார்த்தபோது நம்மளை எல்லாம் முட்டாப் பயலுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ரவுடி துறைமுகம் ஒன்றில் அமர்ந்து கொண்டு வில்லன் பூமியை நான் தீர்த்து கட்டுவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் வில்லன் பூமி நாலே குத்தில் அந்த ரவுடியை கொலை செய்து விடுகிறார். அப்போது காலையில் வரும் பொழுது பகலாக இருக்கும் அந்த காட்சி நேரம் செல்ல செல்ல இரவாக மாறிவிடுகிறது. இதைக் கூட கவனிக்காமல் படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். இவங்களுக்கு இதுவே போதும் என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை. வேலை இல்லாத இளைஞராக வரும் ராகவா லாரன்ஸ் குறும்புக்கார இளைஞராக இருக்கிறார். அதை பார்க்க சகிக்கவில்லை. ஒரு நல்ல பாட்டு கூட எடுக்க முடியவில்லை, ஜோர்த்தாலே போன்று பாடல்களை எடுத்து ரீமிக்ஸ் செய்திருக்கின்றனர். இதில் கூட்டம் தான் இருக்கிறது, பாட்டில் ஒன்றுமே இல்லை. மேலும் மசாலா படங்களை நம்மளே செய்தால் எப்படி ஏதாவது பேய் பிசாசு இருக்க வேண்டும் அல்லவா என்று யாரோ இயக்குனரிடம் சொல்லிவிட்டார்கள் போல.

அதற்காக கஞ்சா அடித்து விட்டு காந்தாரா போல ஒரு கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பாலைய்யா செய்யும் வேலைகள். பாலையாவை அப்படியே அவரது பர்மிஷன் இல்லாமல் பார்த்துக் காப்பி அடித்திருக்கிறார்கள். கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் அம்மா அப்பாவை பார்த்துக் கொள்ளுங்கே போன்ற கருத்துக்களை கூறுகிறார்கள். அம்மா அப்பாவை பார்த்துக் கொள்ளுவது இருக்கட்டும், நீங்க எடுத்த படத்தை நீங்களே போட்டுப் பார்த்தீர்களா? முன்பெல்லாம் நடிகர் வீட்டில் வருமான வரி சோதனை செய்வார்கள் இனிமேல் விக்கு செய்பவர்கள் வீட்டில் சோதனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்ர அந்த அளவிற்கு விக்குகளை பயன்படுத்துகிறார்கள். விடுதலைப் படத்தில் கிளைமாக்ஸ் இல் பார்ட் 2 என்று எண்டு கார்டில் போட்ட போது தியேட்டரே அல்லோல கல்லோல பட்டது. ஆனால் இந்த படத்தின் எண்டு கார்டில் பார்ட் 2 என்று போட்ட பொழுது ஐயையோ என்று கதறிக்கொண்டு பார்வையாளர்கள் அனைவரும் ஓடுகிறார்கள், என்று ப்ளூ சட்டை தனது விமர்சனத்தை கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Tamil Talkies