நடிகர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் சில காலமாகவே பேச்சுவார்த்தை இல்லை என்பது நாம் அறிந்ததே. நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்டத் தலைவர்களை நியமிப்பது, ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றுவது போன்ற பல விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. அன்று முதல் விஜய் தனது தந்தையுடன் பேசுவதில்லை என்ற செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. மாஸ்டர் படம் நடித்துக் கொண்டிருந்த போது கூட தன் தாயை மட்டும் சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் விஜய். இதன் மூலம் தனது தந்தையின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லை என்று சூசகமாக தெரிவித்தார். விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் அளித்து வரும் பேட்டிகளில் கூட விஜய் தன்னிடம் பேசுவதில்லை என்றும், வீட்டிற்கு வந்து சந்திப்பதில்லை என்றும் மாதம் ஒரு முறையாவது வீட்டிற்கு வந்து எங்களை பார்த்துவிட்டு போ விஜய் என்றெல்லாம் கேட்டு இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு சந்திரசேகரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கலங்கி பதிவிட்டு இருந்தனர். சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபாவும் மட்டும் அமர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். இதை பார்த்த விஜய் ரசிகர்களே கூட விஜய் இப்படி செய்து இருக்க கூடாது என்று அறிவுரை வழங்கினார்கள். பின்னர் அடுத்த நாள் சந்திரசேகர் மனைவியுடன் திருக்கடையூர் சென்று யாகங்கள் செய்து விஜய்க்காக வேண்டிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. தந்தை பிறந்தநாளுக்கு வாழ்த்து கூட சொல்லவில்லை என்று ஒரு சாரார் விஜயை திட்டி தீர்க்க தற்போது அது குறித்து விளக்கமளித்துள்ளார் சந்திரசேகர். அவர் அளித்த பேட்டியில் இதுவரை சொல்லாத பல தகவல்களை அவர் பேசியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பலரும் இன்று சந்திரசேகரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தனர்.
உங்கள் பிறந்தநாளுக்கு விஜய் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, அவருக்கு ஜூலை 2 ஹைதராபாத்தில் ஷூட்டிங் இருந்ததால் ஜூலை 1ம் தேதியே அவர் ஹைதராபாத் சென்று விட்டதாக கூறினார். தனக்கு இன்று வாழ்த்து சொல்ல வந்தவர்களில் பலர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் என்றும், ஆனாலும் தன்னை அப்பாவாக நினைப்பதாலும், விஜய் என்னும் மந்திரத்தை தவிர ஒன்றும் அறியாதவர்கள் என்றும் அந்த ஒரு பாசத்திற்காக இன்று என்னை சந்திக்க வந்துள்ளனர் என்றும் கூறினார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் நீர்த்து போய்விட்டது, வலுவிழந்துவிட்டது என்றும் கூறினார். விஜய் மக்கள் இயக்கத்தில் நீக்கப்பட்ட பலரை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க தான் பாடுபட்டு வருவதாகவும், இது குறித்து விஜயிடம் பேசிய போது நேரம் வரும் போது பார்க்கலாம் என்று விஜய் கூறியதாகவும் சந்திரசேகர் கூறினார்.
அரசியல் கட்சிக்கு உண்டான தகுதி இருந்த ஒரு அமைப்பாக இருந்தது விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் நேரங்களில் பல கட்சிகள் தங்களை அணுகியதாகவும் அவர் கூறினார். இப்படி இருந்த இயக்கத்தை காசு கொடுத்தால் மாவட்டத் தலைவர் கிடைக்கும் என்று நிலைமை வந்துவிட்டதாகவும், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டதாகவும் அவர் கூறினார். அவரின் முழுப் பேட்டியை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Thanthi Tv